“காத்திருக்கிறேன்” – பிரித்தானிய மன்னரின் வருகைக்கு ட்ரம்ப் ஆவல்
பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் (Charles) மன்னரும் ராணி கமிலாவும் (Camilla) அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில்
அவர்களின் பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்ரூத்’ சமூக வலைதளத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் இடம்பெறும் எனவும், ஏப்ரல் 28 ஆம் திகதி அன்று வெள்ளை மாளிகையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார் .
அமெரிக்கா இந்த வருடம் 250 வது ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில் இந்த மகத்தான தருணம் அவர்களின் வருகையால் மேலும்
சிறப்பாக அமையும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மன்னரை நேரில் சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இந்த அரசுமுறைப் பயணத்திற்கான திகதிகளை பக்கிங்ஹாம் அரண்மனை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




