தமன்னாவின் மோதிரம் இரண்டு கோடி ரூபாயா? இதோ அவரது அதிர்ச்சியான விளக்கம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் அனிருத் இசையமைத்த ‘காவாலா’ பாடலின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு தென்னிந்தியா மற்றும் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா தனது வாழ்க்கையில் மற்றொரு உயரத்தை எட்டியுள்ளார்.
இதற்கிடையில், ஒரு பெரிய வைர மோதிரம் போன்ற தோற்றமளிக்கும் அவரது புகைப்படம் ஒன்று வைரலானதை அடுத்து அது பேசுபொருளானது.
இந்த மோதிரத்தின் விலை சுமார் 2 கோடி ரூபாய் என்றும், 33 வயதான நடிகைக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம்சரண் தேஜாவின் மனைவி உபாசனா கொனிடேலா பரிசளித்ததாகவும் கூறப்படுகிறது.
தமன்னா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் “நாங்கள் பாட்டில் ஓப்பனருடன் போட்டோ ஷூட் செய்து கொண்டிருந்தோம், உண்மையான வைரம் #GirlsLikeToClickPics அல்ல” என்று தமன்னா தெளிவுபடுத்தியுள்ளார்.
சில நூறு ரூபாய் மட்டுமே இருக்கக்கூடிய பாட்டில் ஓப்பனர் இரண்டு கோடி வைர மோதிரமாக மாறியதாக நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமன்னா மகாராஷ்டிராவை சேர்ந்த வைர வியாபாரியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.