பொறுப்பற்ற செயல் – அசோக ரன்வல கைது!
சப்புகஸ்கந்தையில் நேற்று இரவு நடந்த விபத்து சம்பவம் தொடர்பாக முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல கைது செய்யப்பட்டுள்ளார்.
கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் விபத்தைத் தவிர்க்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




