இலங்கை

தற்கொலை மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!!

திருகோணமலை பொது வைத்தியசாலை களமொன்றிலும் , உளநலப் பிரிவிலும் இடம்பெற்ற மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் உள்ள உள நலப்பிரிவில் கிண்ணியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த மரணம் தொடர்பில் பல்வேறுபட்ட விதத்தில் பல்வகையான கருத்துக்கள் பேசப்பட்டு வந்தன.

ஆனாலும் உளநல பிரிவில் நோயாளர்களை அனுமதிக்கும் போது அவர்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கடமையாற்றுகின்றவர்கள் மிகவும் அக்கறையுடன் கடமைகளை செய்திருக்க வேண்டும். அப்படி இருந்தும் உண்மைகள் மறைக்கப்பட்டன.

இருந்த போதிலும் சுகாதார அமைச்சுக்கு முறைப்பாடுகள் சென்றன. அவர்கள் குறித்த மரணம் தொடர்பில் பல்வேறுபட்ட கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இறுதியாக குறித்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விடயம் தொடர்பில் அனுமதிக்கும் டிக்கெட் காணாமல் போய் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை களமொன்றில் ஆண் மற்றும் பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்து வேலையில் அப்பெண் அனுமதிக்கப்பட்ட டிக்கெட் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

குறித்த மரணம் தொடர்பிலான விசாரணைகள் சுகாதாரத் திணைக்களத்தினால் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எமது ஊடக வலையமைப்பு தொடர்ச்சியாக அவதானத்துடன் செயற்படும்!!

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!