ஜமைக்காவை தாக்கிய மெலிசா சூறாவளி(Hurricane Melissa)
மெலிசா சூறாவளி(Hurricane Melissa) நேற்று(28) காலை கரீபிய நாடான ஜமைக்காவின் மேற்குப் பகுதியில் கரையைக் கடந்தது. தற்போது கியூபாவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.
இந்த சூறாவளியால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து ஜமைக்காவை பேரிடர் பகுதியாக அந்நாட்டு பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்லென்ஸ்(Andrew Hollens) அறிவித்துள்ளார்.
5ம் நிலை கொண்ட புயலாக வலுப்பெற்ற மெலிசா மணிக்கு 300 கிலோமீற்றர் வேகத்தில் ஜமைக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளை தாக்கி, பெரும் மழையையும், மண்சரிவையும் ஏற்படுத்தி உள்ளது.
மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஜமைக்காவின் சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும், இந்த சூறாவளிக்கு மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜமைக்கா முழுவதும் ,இடைவிடாத கனமழை, சூறாவளியால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் இல்லை. தகவல் தொடர்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.





