ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு வாகனங்கள் வழங்க வேண்டாம் – கடும் எச்சரிக்கை
செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வழங்க வேண்டாம் என வாகன உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களுக்கு பொலிஸார் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். உரிமம் இல்லாத வெளிநாட்டு ஓட்டுநர்கள் தொடர்புடைய பல விபத்துகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் இத்தகைய விபத்துகளில் ஐவர் உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த ஆண்டு ஏழு கடுமையான விபத்துகள், 78 சிறிய காயங்கள் மற்றும் ஆறு வாகன சேதச் சம்பவங்களும் […]













