உலகம் செய்தி

அமெரிக்காவை தாக்கும் குளிர்கால புயல் – 5,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

  • February 23, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் கடுமையான குளிர்கால புயல் தாக்கம் காரணமாக 5,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. கடுமையான குளிர்கால புயல் தாக்கம் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள்தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வட கரோலினாவிலிருந்து மெய்ன் (Maine) மாநிலம் வரை குளிர்கால புயல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. கிழக்கு கனடாவின் சில பகுதிகளிலும் எச்சரிக்கைகள் அமலில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் முதன்முறையாக நியூயோர்க் நகரத்திற்கு பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திள் தெரிவிக்கின்றன.

இலங்கை செய்தி

கொழும்பு மாநகர சபை தொடர்பான முறைப்பாடு – காலவகாசம் நீடிப்பு

  • February 23, 2026
  • 0 Comments

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் மோசடிகள் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான கால காலவகாசத்தை மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரை நீடித்துள்ளது. 201 0ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல் நடவடிக்கைகள், மோசடிகள், நம்பிக்கைப் பொறுப்பின் குற்றவியல் ரீதியான மீறுகையால் அரச சொத்துக்கள் அல்லது வருமானத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் […]

செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை 74 இலட்சமாக உயர்வு

  • February 23, 2026
  • 0 Comments

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை 74 இலட்சமாக உயர்வடைந்துள்ளது. தகுதியுள்ள வாக்காளர்களைக் கொண்ட 2026 ஆம் ஆண்டின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளதாக, அம்மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடியாக காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி, 18 முதல் […]

இலங்கை செய்தி

இலங்கையில் ஆடை தரக் கண்காணிப்பு மையங்களை நேரில் ஆய்வு செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

  • February 23, 2026
  • 0 Comments

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு துணை அமைச்சர் சதுரங்க அபேசிங்க (Chathuranga Abeysinghe) ஆகியோர், கொழும்பில் அமைந்துள்ள ஆடை களஞ்சியம் மற்றும் தரக் கண்காணிப்பு மையங்களை நேரில் பார்வையிட்டனர். பிரித்தானியாவுக்கான ஏற்றுமதி பொருட்களின் தயாரிப்பு மற்றும் தரநிலைகள் தொடர்பாகவும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 2026 ஜனவரி முதலாம் ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்த வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்துக்கமைய இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. மேலும் […]

இலங்கை செய்தி

“பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு சமாதி கட்டுக: கிளிநொச்சியில் கையெழுத்து வேட்டை!

  • February 23, 2026
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை Terrorism Prevention Act முழுமையாக நீக்கக் கோரியும், அதற்கு மாற்றீடாக அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்ட மூலத்துக்கு’ எதிர்ப்புத் தெரிவித்தும் கிளிநொச்சியில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இப்போராட்டத்தில் கலந்துகொண்டு தனது கையொப்பத்தைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் […]

உலகம்

மலேசியாவை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • February 23, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் கலிமந்தன் (Kalimantan ) பகுதியில் 07.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 633 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தினால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.    

இலங்கை செய்தி

ஜனவரியில் பணவீக்கம் குறைவு

  • February 23, 2026
  • 0 Comments

2026 ஆண்டின் ஜனவரி மாதத்தில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணிற்கு அமைய பணவீக்கம் குறைவடைந்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 2.9% ஆகக் காணப்பட்ட நாட்டின் பணவீக்கம், 2026 ஆண்டின் ஜனவரி மாதத்தில் 2.4% வரை குறைந்துள்ளது. அத்துடன் 2025 ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 4.4% ஆகப் பதிவாகியிருந்த உணவுப் பணவீக்கம், 2026 ஆண்டின் ஜனவரி மாதத்தில் 3.4% ஆகக் குறைந்துள்ளது. […]

உலகம்

நேபாளத்தில் ஆற்றில் பாய்ந்த பேருந்து – 17 பேர் பலி!

  • February 23, 2026
  • 0 Comments

நேபாளத்தில் திஷுலி ஆற்றில் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில்,  குறைந்தது  17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். போகாராவில் இருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுவுக்குச் சென்ற பயணிகள் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படாத நிலையில்,  நாட்டின் பாதுகாப்புப் படையினர் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

error: Content is protected !!