இலங்கை செய்தி

மூன்று புதிய தூதுவர்கள் நியமனம்: ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரம் கையளிப்பு!

  • February 24, 2026
  • 0 Comments

இலங்கைக்காக புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (24) முற்பகல் இதற்குரிய நிகழ்வு நடைபெற்றது. 01- கியூபா குடியரசின் புதிய தூதுவராக Patricia Lázara Pego Guerra, 02- கத்தார் நாட்டின் புதிய தூதுவராக Hamad Mohammed Abdullah Al – Sanad Al – Dosari, 03- ஸ்லோவேனியா குடியரசின் தூதுவராகTomaž Mencin ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நற்சான்றிதழ் பத்திரங்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர், […]

இந்தியா செய்தி

இந்தியாவில் இந்த மாநிலத்தில் 16 வயதுக்குட்பட்டோர் கைடக்கத்தொலைபேசி பயன்படுத்த தடை

  • February 24, 2026
  • 0 Comments

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோர் கையடக்கத்தொலைபேசி பயன்படுத்த தடை விதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்துவதால், சிறுவர்களின் மனநலம் மற்றும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக உலக நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன. மேலும் அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்தது. இந்த நிலையில், இந்தியாவிலும் சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசு பரிசீலித்து […]

இலங்கை செய்தி

கடல் கொந்தளிப்பு – மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவிப்பு

  • February 24, 2026
  • 0 Comments

இலங்கைக்கு வடகிழக்கே மத்திய வங்கக் கடல் பகுதியில் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (24) பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வடகிழக்கே மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்த பிரதேசம் கிழக்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் வலுவிழக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக, பல கடல் பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சி அல்லது இடியுடன் […]

இலங்கை செய்தி

யாழில் சர்வதேச மைதான கட்டுமான பணி கைவிடப்படுமா?

  • February 24, 2026
  • 0 Comments

யாழ். மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தொடரும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். சுற்றுச்சூழல் அனுமதி செயல்முறை முடியும்வரை கட்டுமான பணியை நிறுத்துமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, “ யாழ்.சர்வதேச விளையாட்டு மைதான கட்டுமான பணி நிச்சயம் முன்னெடுக்கப்பட வேண்டும். ஒரு திட்டத்தை […]

இலங்கை செய்தி

அக்குரேகொடை கொலை சம்பவம் – விசாரணைகள் 80 வீதம் நிறைவு

  • February 24, 2026
  • 0 Comments

அக்குரேகொடை கொலை சம்பவம் குறித்த விசாரணைகள் 80 வீதம் நிறைவடைந்துள்ளன. பொலிஸ் ஊடக பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் இன்று இதனை தெரிவித்துள்ளார். அக்குரேகொடை துப்பாக்கிச் சூடு இடம்பெற்று 3 நாட்களுக்குள் பிரதான துப்பாக்கிதாரி உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் மூவர் 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவுக்கமைய விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஏனைய சந்தேக நபர்கள் விளக்கமறியலில் உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகம்

தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் ஆஸ்திரேலிய பிரதமர்!

  • February 24, 2026
  • 0 Comments

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese’) தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். கான்பெராவில் உள்ள அல்பானீஸின் இல்லத்தில் தற்போது உள்ளூர் அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், முழுமையான பாதுகாப்பு சோதனை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “சமூகத்திற்கோ அல்லது பொதுப் பாதுகாப்புக்கோ தற்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், பிரதமரை வெளியேற்றுவது அதிகாரிகளின் “குறிப்பிடத்தக்க நடவடிக்கை” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் […]

இந்தியா

கேரள மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

  • February 24, 2026
  • 0 Comments

“கேரள” மாநிலத்தின் பெயரை “கேரளம்” என்று மாற்றுவதற்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று இதனை அறிவித்தார். கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என்று மாற்றுவதற்கான தீர்மானம் கடந்த 2024 ஆம் ஆண்டு  ஜூன் 24  அன்று, அவ் மாநில  சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த முதலமைச்சர் பினராயி விஜயன் (Pinarayi Vijayan), மலையாளத்தில் இந்த மாநிலம் ‘கேரளம்’ என்று அழைக்கப்படுவதாகவும், மலையாள மொழி பேசும் […]

இலங்கை

தித்வா சூறாவளி : நிவாரணத் திட்டத்திற்காக 24.4 பில்லியன் ரூபாய் விடுவிப்பு!

  • February 24, 2026
  • 0 Comments

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டங்களின் கீழ் இதுவரை 24.4 பில்லியன் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் பொது நிதிக் குழுவிடம் தெரிவித்துள்ளனர். தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படும் பேரிடர் நிவாரணத்தின் முன்னேற்றம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் பிற வளாகங்களை சுத்தம் செய்தல், வீட்டுப் பொருட்களை வாங்குதல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு உதவி வழங்குதல் ஆகியவற்றிற்காக அறிவிக்கப்பட்ட பெரும்பாலான கொடுப்பனவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் […]

உலகம்

ரஷ்ய போரில் ஈடுபட்டுள்ள தென்னாப்பிரிக்க வீரர்களை மீட்க முனைப்பு!

  • February 24, 2026
  • 0 Comments

உக்ரைனில் ரஷ்யாவுக்காகப் போராடுவதற்காக ஈர்க்கப்பட்ட 17 பேர் கொண்ட குழுவில் 11 பேர் விரைவில் வீடு திரும்ப உள்ளதாக தென்னாப்பிரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. நான்கு பேர் கடந்த வாரம் நாட்டிற்குத் திரும்பிய நிலையில், இன்று தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ராமபோசாவின் (Ramaphosa) அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இருவர் ரஷ்யாவில் இருப்பதாகவும் அதில் ஒருவர் மொஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க ஆண்கள் வேலை வாக்குறுதிகளுடன் ரஷ்யாவிற்குள் ஈர்க்கப்பட்டு பின்னர் போர் களத்தில் […]

பொழுதுபோக்கு

அமிதாப் பச்சனை சந்தித்த கமல்!

  • February 24, 2026
  • 0 Comments

‘கல்கி 2898AD’ 2 படப்பிடிப்புத் தளத்தில் நடிகர்களான அமிதாப் பச்சனும், கமல்ஹாசனும் நேரில் சந்தித்துள்ளனர். தற்போது ‘கல்கி 2898AD’ 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த பாகத்தில் கமல்ஹாசனின் யாஸ்கின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளனர். இது குறித்த படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

error: Content is protected !!