பாகிஸ்தான் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பிய 300க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் கைதிகள்
கடந்த வாரத்தில் பாகிஸ்தான் சிறைகளில் இருந்து மொத்தம் 305 ஆப்கானிஸ்தான் கைதிகள் விடுவிக்கப்பட்டு, பாதுகாப்பாக ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியுள்ளதாக அகதிகள் மற்றும் நாடு திரும்பும் அமைச்சகம் இன்று (30) அறிவித்தது. ஒரு நாள் முதல் இரண்டு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முழுவதும் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்ட கைதிகள், தெற்கு காந்தஹார்(Kandahar ) மாகாணத்தில் உள்ள ஸ்பின் போல்டாக் எல்லைக்(Spin Boldak border ) கடவை வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் திரும்பிச் சென்றதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]













