பிரித்தானியாவில் உயிரிழந்த பெண்ணின் கருப்பையில் இருந்து பிறந்த முதல் குழந்தை!
பிரித்தானியாவில் உயிரிழந்த ஒருவரின் கருப்பையில் இருந்து குழந்தையொன்று பிறந்துள்ளது. டிசம்பர் மாதம் லண்டனில் உள்ள குயின் சார்லோட் மற்றும் செல்சியா மருத்துவமனையில் சிசேரியன் மூலம் ஹ்யூகோ பவல் என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் போது 3.1 கிலோ எடையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குழந்தையின் தாயான கிரேஸ் பெல் (Grace Bell), மேயர்-ரோகிடான்ஸ்கி-குஸ்டர்-ஹவுசர் என்ற அரிய என்ற அரியவகை நோயுடன் பிறந்துள்ளார். அதாவது அவர் பிறக்கும்போதே கருப்பையின்றி பிறந்துள்ளார். அவர் டீனேஜ் பருவதை அடைந்ததும் இந்த […]













