உலகம்

அமெரிக்காவில் அதிர்ச்சி! ஆய்வகத்திலிருந்து தப்பிய கொடிய வைரஸால் பாதிக்கப்பட்ட குரங்குகள்

  • October 31, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பெரிய நெடுஞ்சாலையில் நடந்த ஒரு லொரி விபத்துக்குப் பிறகு, பல வைரஸ்களால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் 3 ரீசஸ் குரங்குகள் ஆய்வகத்திலிருந்து தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பொது சுகாதார ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரீசஸ் குரங்குகளை ஏற்றிச் சென்ற லொரி கவிழ்ந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸில் உள்ள டூலேன் பல்கலைக்கழகத்திலிருந்து குரங்குகள் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹெபடைடிஸ் சி (Hepatitis C) […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மெட்டா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு! நாள் ஒன்றுக்கு 3.5 பில்லியன் பயனர்கள்

  • October 31, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான (Q3) தனது நிதிசார் அறிக்கைகளை மெட்டா (Meta) நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளவில் 3.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மெட்டா செயலியைப் பயன்படுத்துவதாக, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். தற்போது மாதாந்திரம் 3 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைத் தாண்டி இன்ஸ்டாகிராம் செயலி சாதனை படைத்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட த்ரெட்ஸ் (Threads) செயலி நாளாந்தம் 150 மில்லியன் பயனர்களைத் தாண்டியுள்ளது. இந்த வருடத்தின் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் இருந்து பெருந்தொகையானவர்கள் நாடு கடத்தல்

  • October 31, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை சுமார் 17,651 பேர் தங்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இதே மாத காலப்பகுதியில் நாடுகடத்தப்பட்டோரின் எண்ணிக்கை, இந்த ஆண்டு நாடுகடத்தப்பட்டோரின் எண்ணிக்கையை விட 20 சதவீதம் குறைவாக இருந்தது. அரசாங்கம் நாடுகடத்தல் விதிகளை எளிதாக்கிய பின்னர் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகடத்தல்கள் துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளன. 1,614 பேர் வரை அங்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் […]

இலங்கை செய்தி

எதிர்பார்ப்புகளை விட அதிகளவில் வலுவடைந்த இலங்கையின் பொருளாதாரம்

  • October 31, 2025
  • 0 Comments

இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விடவும் வலுவடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 3.1 சதவீதமான பொருளாதார வளர்ச்சியை அடைய இலங்கையால் முடியக்கூடும் என நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்பிலின் (Thomas Helbling) நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அவர் ஆசிய பசுபிக் பிராந்தியம் தொடர்பான பொருளாதார வளர்ச்சிக் கண்ணோட்டத்தை வெளியிட்டுப் பேசினார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் அமுலாக்கும் பரந்த சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் […]

இலங்கை செய்தி

இலங்கை: போலி சோதனை நடத்தி பணம் திருடிய மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது

  • October 30, 2025
  • 0 Comments

கொழும்பில் ரூ.102 மில்லியன் திருட்டு குற்றச்சாட்டில் கலால் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த அதிகாரிகள் 2025.06.05 அன்று கொழும்பு, செட்டியார்(Chettiar) தெருவில் உள்ள இரண்டு தங்க ஆபரணக் கடைகளில் அதிகாரப்பூர்வ சோதனை நடத்துவதாகக் கூறி பணம் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் சட்டபூர்வமான சோதனை நடத்துவது போல் இரு தங்க ஆபரணக் கடைகளுக்கு சென்று, அங்கிருந்து 102 மில்லியன் பணத்தை […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 70 வயது முதியவர் மரணம்

  • October 30, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் டான்காஸ்டரில்(Doncaster) நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மேலும், 41 வயது விமானி, பயணிகளான 58 வயது பெண் மற்றும் 10 வயது சிறுவன் லேசான காயங்களுக்கு ஆளாகி உள்ளதாக தெற்கு யார்க்ஷயர்(South Yorkshire) காவல்துறை தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர் நாட்டிங்ஹாம்ஷையரில்(Nottinghamshire) உள்ள ரெட்ஃபோர்ட் கேம்ஸ்டன்(Redford Camden) விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறுது நேரத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. “மருத்துவ ஊழியர்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும்” விபத்து நடந்த இடத்திலேயே முதியவர் இறந்துவிட்டதாக […]

இந்தியா செய்தி

சண்டிகரில் 6 ஆக்ரோஷமான நாய் இனங்களுக்கு தடை விதிப்பு

  • October 30, 2025
  • 0 Comments

வட இந்திய மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரான சண்டிகரில் செல்லப்பிராணி மற்றும் சமூக நாய்களுக்கான துணைச் சட்டங்கள் படி, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஆறு ஆக்ரோஷமான நாய் இனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இனங்களில் அமெரிக்கன் புல்டாக்(Bulldog), அமெரிக்கன் பிட்புல்(Pitbull), புல் டெரியர்(Bull Terrier), கேன் கோர்சோ(Cane Corso), டோகோ அர்ஜென்டினோ(Dogo Argentino) மற்றும் ராட்வீலர்(Rottweiler) ஆகியவை அடங்கும். இருப்பினும், இந்த இனங்களில் ஏதேனும் ஒன்றை ஏற்கனவே வைத்திருப்பவர்களுக்கு இந்த தடை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

செய்தி விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கவை எதிர்கொள்ளும் இந்தியா

  • October 30, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில், நவி மும்பையில்(Navi Mumbai) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பில், ஃபோப் லிட்ச்ஃபீல்ட்(Phoebe Litchfield) 119 ஓட்டங்களும் […]

இந்தியா செய்தி

ஆந்திரப் பிரதேசத்தில் மோந்தா புயல் காரணமாக 3 பேர் மரணம்

  • October 30, 2025
  • 0 Comments

ஆந்திரப் பிரதேசத்தில் மோந்தா(Mondha) புயல் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோந்தா புயல் காரணமாக 87,000 ஹெக்டேர் பரப்பளவில் விளைநிலங்கள் மற்றும் பயிர்கள் சேதமாகியுள்ளது. 1,825 கிராமங்களில் 78,796 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சூறாவளி காரணமாக 107 ரயில்கள், 18 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மோந்தா புயல் ஆந்திராவின் காக்கிநாடா – மசூலிப்பட்டினம்(Kakinada and Masulipatnam) இடையே அந்தர்வேதிபாளையம்(Antarvedipalayam) என்னும் இடத்தில் கரையை கடந்தபோது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியுள்ளதாக […]

உலகம் செய்தி

கடத்தப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு $1 மில்லியன் கப்பம் கோரும் சூடானின் துணை ராணுவம்

  • October 30, 2025
  • 0 Comments

சூடானின் துணை ராணுவப் படையான விரைவு ஆதரவுப் படைகள் (RSF), அல்-ஃபாஷிர்(Al-Fashir) நகரில் கடத்தப்பட்ட ஆறு சுகாதாரப் பணியாளர்களை விடுவிப்பதற்காக $1 மில்லியன் கப்பம்(ransom) கோருவதாக சூடான் மருத்துவர்கள் வலையமைப்பு (SDN) தெரிவித்துள்ளது. அல்-ஃபாஷிர் முற்றுகையின் போது காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த நான்கு மருத்துவர்கள், ஒரு மருந்தாளர் மற்றும் ஒரு செவிலியர் அடங்கிய பணயக்கைதிகள், சூடானின் விரைவு ஆதரவுப் படை மற்றும் கூட்டணிப் படைகளால் கடத்தப்பட்டனர். வடக்கு டார்ஃபர்(Darfur) மாகாணத்தின் தலைநகரான அல்-ஃபாஷிரை முழுமையாகக் கைப்பற்றியதாக […]

error: Content is protected !!