உலகம்

ஆஸ்திரேலிய முன்னாள் அமைச்சர் கேரத் வார்டுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை!

  • October 31, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரும், நியூ சவூத் வேல்ஸ் மாலியத்தின் முன்னாள் அமைச்சருமான கேரத் வார்டுக்கு (Gareth Ward) சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரு இளைஞர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையிலேயே பரமட்டா மாவட்ட நீதிமன்றத்தால் இன்று மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஐந்து வருடங்கள் மற்றும் 9 மாதங்கள் அவர் சிறை தண்டனையை எதிர்கொள்ள வேண்டும். குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் நிகழ்நிலை மூலமே நீதிமன்றத்தில் முன்னிலையானார். பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களும் இணையவழியில் […]

இலங்கை செய்தி

ஐரோப்பா செல்ல முயற்சித்த இலங்கையர் லாட்விய எல்லையில் சடலமாக மீட்பு

  • October 31, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடு ஒன்றுக்குச் செல்ல முற்பட்ட இலங்கை நாட்டவர் ஒருவர், லாட்விய எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக பயணிக்க முயற்சித்த இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஒக்டோபர் 27-28ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக லாட்விய நாட்டிற்குள் நுழைய முற்பட்ட இருவரை எல்லைக் காவலர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 34 வயதுடையவர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த இருவரும் இலங்கையர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லாட்விய […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வரும் இஸ்ரேல்!

  • October 31, 2025
  • 0 Comments

​​தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து லெபனான் (Lebanon) ஜனாதிபதி ஜோசப் அவுன் (Joseph Aoun) அத்தகைய ஊடுருவல்களை சமாளிக்க தனது இராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த தாக்குதல்கள் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளன. லெபனானில் (Lebanon) உள்ள  ஹெஸ்பொல்லா (Hezbollah) ஆயுதக் குழுக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது. லெபனான் போராளிக் குழுவுடன் நவம்பர் 2024 போர் நிறுத்தம் இருந்தபோதிலும், தெற்கு லெபனானில் ஐந்து பகுதிகளில் இஸ்ரேல் துருப்புக்களைப் பராமரித்து வருகிறது. மேலும் வழக்கமான […]

செய்தி

தாவும் அரசியல் தேவையில்லை – எதிரணிக் கூட்டிலிருந்து மக்கள் போராட்ட முன்னணி விலகல்

  • October 31, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்குத் தமது கட்சி ஆதரவு வழங்காது என்று மக்கள் போராட்ட முன்னணி அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் கூட்டம் மற்றும் எதிர்ப்புப் பேரணியை நடத்துவதற்கு எதிரணிகள் ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி கூட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்படுமா என மக்கள் போராட்ட […]

உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்

  • October 31, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவர்களின் வேலைக்கான அனுமதிச் சீட்டைத் தானாகவே நீட்டிப்பு செய்யும் முறையை அரசு நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் (Donald Trump) பொறுப்பேற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் தங்கள் நாட்டவர்களுக்கு (அமெரிக்கர்களுக்கு) முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் அவர் திட்டவட்டமாக இருக்கிறார். இந்த நிலையில், வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்கி வேலை பார்ப்பதற்கான EAD […]

ஐரோப்பா செய்தி

விண்ட்சர் ( Windsor) வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள ஆண்ட்ரூ (Andrew)!

  • October 31, 2025
  • 0 Comments

பிரிட்டனின் மன்னர் சார்லஸ் (Charles), தனது தம்பி ஆண்ட்ரூவின் (Andrew) இளவரசர் பட்டத்தை பறித்து, தனது விண்ட்சர் (Windsor)வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று தெரிவித்துள்ளது. சார்லஸின் தம்பியும், மறைந்த ராணி எலிசபெத்தின் (Charles) இரண்டாவது மகனுமான 65 வயதான ஆண்ட்ரூ (Andrew) , சமீபத்திய ஆண்டுகளில் தனது நடத்தை மற்றும் மறைந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடனான (Epstein) தொடர்புகள் காரணமாக பெருகிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்த மாத தொடக்கத்தில் அவர் யார்க் டியூக் ( […]

ஐரோப்பா செய்தி

இருளில் மூழ்கிய உக்ரைன் நகரங்கள் – இரவு முழுவதும் பதற்றத்தில் போலந்து!

  • October 31, 2025
  • 0 Comments

ரஷ்யா  650 ட்ரோன்கள் மற்றும் 50 ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சபோர்ஜியாவில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தது 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஏவுகணைகள் போலந்தின் எல்லையை தாண்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாட்டை தற்காத்துக்கொள்ள போலந்தும் போர் விமானங்களை அனுப்பியுள்ளது. கின்சல் வான்வழி ஏவுகணைகள் Kinzhal air-launched missiles, பாலிஸ்டிக் வெடிக்கும் ஆயுதங்கள் ballistic […]

கருத்து & பகுப்பாய்வு

வியாழன் கிரகத்திற்குள் மறைந்திருக்கும் மர்மங்கள் – பூமியைப் பாதுகாக்கும் காவலன்

  • October 31, 2025
  • 0 Comments

சூரிய மண்டலத்தில் மிகப்பெரிய கிரகமான வியாழன் (Jupiter), ஒரு புதிய ஆய்வில் விண்வெளிச் சூப்பர் ஹீரோ  என்று கண்டறியப்பட்டுள்ளது. பூமியை உருவாக்கக் காரணமாக இருந்த வியாழன் பல வியக்கவைக்கும் அம்சங்களைக் கொண்டுள்ளதாக, ரைஸ் பல்கலைக்கழக (Rice University) விஞ்ஞானிகள் நடத்திய புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரியக் குடும்பம் உருவானபோது வியாழன் கோள் மிக வேகமாகப் பெரிதானதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வியாழனின் பிரம்மாண்டமான ஈர்ப்பு விசை, உள்ச் சூரியக் குடும்பத்தை […]

உலகம்

அமெரிக்காவில் அதிர்ச்சி! ஆய்வகத்திலிருந்து தப்பிய கொடிய வைரஸால் பாதிக்கப்பட்ட குரங்குகள்

  • October 31, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பெரிய நெடுஞ்சாலையில் நடந்த ஒரு லொரி விபத்துக்குப் பிறகு, பல வைரஸ்களால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் 3 ரீசஸ் குரங்குகள் ஆய்வகத்திலிருந்து தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பொது சுகாதார ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரீசஸ் குரங்குகளை ஏற்றிச் சென்ற லொரி கவிழ்ந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸில் உள்ள டூலேன் பல்கலைக்கழகத்திலிருந்து குரங்குகள் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஹெபடைடிஸ் சி (Hepatitis C) […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மெட்டா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு! நாள் ஒன்றுக்கு 3.5 பில்லியன் பயனர்கள்

  • October 31, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான (Q3) தனது நிதிசார் அறிக்கைகளை மெட்டா (Meta) நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளவில் 3.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மெட்டா செயலியைப் பயன்படுத்துவதாக, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். தற்போது மாதாந்திரம் 3 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைத் தாண்டி இன்ஸ்டாகிராம் செயலி சாதனை படைத்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட த்ரெட்ஸ் (Threads) செயலி நாளாந்தம் 150 மில்லியன் பயனர்களைத் தாண்டியுள்ளது. இந்த வருடத்தின் […]

error: Content is protected !!