இலங்கை செய்தி

இலங்கையில் சிக்குன்குன்யா வைரஸ் – அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை

  • December 18, 2025
  • 0 Comments

இலங்கைக்கு செல்லும் அனைத்து பயணிகளும் மேம்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) எச்சரித்துள்ளது. டிட்வா புயலால் ஏற்பட்ட பேரழிவால் இலங்கையின் உட்கட்டமைப்பும் சுகாதார சேவைகளும் பாதிக்கப்பட்ட நிலையில், நுளம்புகளால் பரவும் சிக்குன்குனியா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பயணிகள் நுளம்பு கட்டுப்பாடு, தூய்மை, சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றல், மற்றும் தேவையெனில் உடனடியாக மருத்துவ உதவிகளை அணுகுதல் போன்ற நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அமெரிக்க […]

இந்தியா உலகம்

இந்தியா – ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து

  • December 18, 2025
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் முன்னிலையில், இந்தியா – ஓமன் இடையே ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று ஓமன் சென்றிருந்தார். இந்நிலையில், இன்று இரு தலைவர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம், ஓமனுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 98.08% பொருட்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோன்று, இந்தியாவுக்கு ஒமன் ஏற்றுமதி செய்யும் […]

இலங்கை செய்தி

08 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

  • December 18, 2025
  • 0 Comments

மகாவலி ஆற்றின் சில நீரேந்து பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் அடுத்த 48 மணித்தியாலங்களில் மகாவலி ஆற்றின் ஓரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய கின்னியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மட்டக்களப்பு பொலன்னறுவை வீதி (கல்லெல்ல பகுதி), சோமாவதிய ரஜ மகா விஹாரைக்கான […]

உலகம்

பசிபிக் கடலில் அமெரிக்கா வான் தாக்குதல் – 8 பேர் பலி

  • December 18, 2025
  • 0 Comments

பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச கடல் பகுதியில் பயணித்த மூன்று படகுகளை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தப் படகுகள் பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் பாதையில் சென்றதாகவும், கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்ததாகவும் உளவுத்துறை உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என இராணுவம் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக […]

இலங்கை செய்தி

எல்லைப்புற கிராமங்கள் குறித்து வடக்கு ஆளுநர் விடுத்துள்ள பணிப்பு!

  • December 18, 2025
  • 0 Comments

வடக்கு மாகாணத்தின் எல்லைப்புறங்கள் மற்றும் காடுகளால் சூழப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் எவற்றையும் விடுத்துவிடாது, அனைத்துப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் முழுமையான திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று நடைபெற்ற, 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை ஆராயும் விசேட கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்படி: விவசாயத் திணைக்களத்திற்கு 619 மில்லியன் ரூபாவும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு 604 மில்லியன் ரூபாவும், கால்நடைத் துறைக்கு […]

ஐரோப்பா செய்தி

அனுமதியின்றி நேட்டோ எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய வீரர்களால் பரபரப்பு!

  • December 18, 2025
  • 0 Comments

எஸ்தோனியா (Estonia) எல்லைக்குள் மூன்று ரஷ்ய எல்லைக் காவலர்கள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  (எஸ்தோனியா நேட்டோ உறுப்புரிமையை கொண்ட நாடாகும்) குறித்த மூவரும் இன்று நர்வா (Narva River) நதி வழியாக  உள்ளே நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ரஷ்ய தூதரை அழைக்க திட்டமிட்டுள்ளதாக எஸ்தோனிய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துதல் மற்றும் பணியாளர் பிரச்சினை குறித்து எஸ்தோனிய உள்துறை அமைச்சர் இகோர் டாரோ (Igor […]

இலங்கை செய்தி

இலங்கையின் பேரிடர் மீட்பு முயற்சிகளுக்கு ஐ.நா. பாராட்டு

  • December 18, 2025
  • 0 Comments

பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் அருணா ஜெயசேகர (ஓய்வு) இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபை (UN) வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்சை சந்தித்து, பேரிடர் மீட்பு முயற்சிகள், நிறுவன சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான உதவிகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மதிப்பாய்வு செய்தார். ஐ.நா. ஒருங்கிணைப்பாளர், இலங்கை மக்கள் காட்டிய தேசிய ஒற்றுமை மற்றும் மீள்தன்மைக்கு பாராட்டு தெரிவித்தார். இதேவேளை, தற்போதைய மீட்பு நடவடிக்கைகள் கடந்த கால குறைபாடுகளிலிருந்து ஒரு தீர்க்கமான மாற்றத்தை பிரதிபலிக்கிறது என்றும், ஒருங்கிணைந்த […]

அரசியல் இலங்கை செய்தி

நாமல் ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளர்: மொட்டு கட்சி அறிவிப்பு!

  • December 18, 2025
  • 0 Comments

  அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவே தமது கட்சி வேட்பாளராக களமிறங்கக்கூடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடு இதுவாகவே இருக்கின்றது எனவும் அவர் கூறினார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சாகர காரியவசம் மேற்படி தகவலை வெளியிட்டார். “ அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவே தற்போது கட்சிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னும் […]

இலங்கை

இலங்கைக்கு மஹிந்திரா இந்தியா நிறுவனம் 100 மில்லியன் ரூபா நிதியுதவி

  • December 18, 2025
  • 0 Comments

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு மஹிந்திரா இந்தியா நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடை தொழிலாளர் அமைச்சகத்தில் இன்று மதியம் வழங்கி வைக்கப்பட்டது. மஹிந்திரா இந்தியா நிறுவனத்தின் முகாமையாளர் சுஜீத் ஜெயந்த் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் துணை அமைச்சருமான டொக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோவிடம் நன்கொடையை வழங்கினர். தொழிலாளர் துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க மற்றும் இந்திய உயர் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸின் தொடர் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

  • December 18, 2025
  • 0 Comments

பிரான்ஸின் முன்னாள் மயக்க மருந்து நிபுணர் ஒருவர், 30 நோயாளிகளுக்கு விஷம் கொடுத்தமைக்காக  ஆயுள் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். இதன் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பெசன்சோன் (Besançon) நகர நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஃபிரடெரிக் பெச்சியர் (Frédéric Péchier) என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குறித்த மருத்துவர், மாரடைப்பு அல்லது இரத்தப்போக்கை ஏற்படுத்தும் விஷ ஊசிகளை பயன்படுத்தி நோயாளிகளை கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெச்சியர் (Péchier) நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து […]

error: Content is protected !!