உலகம் செய்தி

வெனிசுலாவின் மற்றுமொரு கப்பலை பின்தொடரும் அமெரிக்கா – அதிகரித்த எண்ணெய் விலை!

  • December 22, 2025
  • 0 Comments

அமெரிக்கா வெனிசுலா நாட்டின் எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்றை கைப்பற்றிய பிறகு இன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன. புதிய நிலவரங்களின் படி கச்சா எண்ணெய் 34 சென்ட்கள் அல்லது 0.6% உயர்ந்து பீப்பாய்க்கு $56.86 ஆக பதிவாகியுள்ளது. வெனிசுலாவிற்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.  அமெரிக்கா வெனிசுலாவின் மற்றுமொரு கப்பலை பின்தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா எண்ணெய் விநியோகத்தின் மூலம் ஈட்டும் வருமானத்தை போதைப்பொருள் வர்த்தகத்திற்கு பயன்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி […]

உலகம்

இந்தோனேசியாவில் கோர விபத்து – 15 பேர் பலி!

  • December 22, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 34 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒரு சுங்கச்சாவடியில் கட்டுப்பாட்டை இழந்து கான்கிரீட் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து (Jakarta) நாட்டின் பண்டைய அரச நகரமான யோககர்த்தாவுக்குச் (Yogyakarta) சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் பேருந்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு […]

ஐரோப்பா செய்தி

30 போர் விமானங்கள், 2,000 மாலுமிகளை ஏற்றிச் செல்லும் கப்பலை கட்டும் பிரான்ஸ்!

  • December 22, 2025
  • 0 Comments

30 போர் விமானங்கள் மற்றும் 2,000 மாலுமிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட ஒரு புதிய விமானம் தாங்கிக் கப்பலை கட்டவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) நேற்று அறிவித்துள்ளார். சர்வதேச  கடற்பரப்புகளில் சுதந்திரமாக செயல்படவும், காலத்தின் தேவைக் கருதியும் இந்த கப்பல் உருவாக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வேட்டையாடும் விலங்குகளின் யுகத்தில், பயப்படுவதற்கு நாம் வலுவாக இருக்க வேண்டும், குறிப்பாக கடலில் வலுவாக இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், கடந்த இரண்டு […]

அரசியல் இலங்கை செய்தி

உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம்: சத்திய கடதாசி வழங்க தயாராகும் நாமல்!

  • December 22, 2025
  • 0 Comments

“ ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டதாகக் கூறப்படும் டொலர்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு இதுவே சரியான தருணமாகும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தேவைப்படும் பட்சத்தில் சத்திய கடதாசியை வழங்குவதற்குகூட நான் தயாராகவே இருக்கின்றேன் எனவும் அவர் கூறியுள்ளார். “ராஜபக்சக்கள் வெளிநாடுகளில் டொலர்களை பதுக்கியுள்ளனர் என தற்போதைய ஆட்சியாளர்களால் அன்று குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த டொலர்களை நாட்டுக்கு கொண்டுவந்தால் நல்லது. அதற்கு அரசாங்கத்தக்கு தேவைப்படும் சகல ஒத்துழைப்பை வழங்குவதற்கு […]

அரசியல் இலங்கை செய்தி

2033 வரை அவகாசம் வேண்டும்: ஐ.எம்.எவ். ஒப்பந்தத்தில் மாற்றம் கோருகிறார் சஜித்!

  • December 22, 2025
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். மாவனல்லை, அரநாயக்க பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு, ” 2033 ஆம் ஆண்டில் இருந்து கடனைத் திருப்பிச் செலுத்துமாறே சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தி இருந்தது. எனினும், அப்போதைய அரசாங்கம் 2028 முதல் கடன் மீள செலுத்தப்படும் என […]

உலகம்

புகுஷிமா பேரழிவிற்குப் பிறகு அணு ஆலையை மீண்டும் திறக்கும் ஜப்பான் -முடிவு இன்று!

  • December 22, 2025
  • 0 Comments

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற புகுஷிமா (Fukushima) பேரழிவிற்குப் பிறகு ஜப்பான்  தனது அணுமின் நிலையத்தை மீளவும் ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தி வருகிறது. அதற்கமைய  உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்குவதற்கான முடிவு இன்று எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டால் வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி ஆலையில் உள்ள ஏழு உலைகளில் முதலாவது உலையை மீண்டும் செயல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் குறித்து ஐ.நா.மகிழ்ச்சி!

  • December 22, 2025
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரணம் வழங்க அரசாங்கம் விரைவாகவும் முறையாகவும் செயல்பட்டதற்கு இதன்போது ஐ.நா. பிரதிநிதி பாராட்டு தெரிவித்தார். உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இதுபோன்ற பேரனர்த்தங்களின் போது இலங்கைக்கு கிடைத்த சர்வதேச ஒத்துழைப்பின் அளவு மிக உயர்ந்த நிலையில் உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்க தனது […]

இலங்கை

அம்பாலாங்கொடையில் தனியார் நிறுவனமொன்றின் மேலாளர் சுட்டுக்கொலை!

  • December 22, 2025
  • 0 Comments

அம்பலாங்கொடையில் இன்று  அதிகாலை  இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்  தனியார் நிறுவனமொன்றின் மேலாளர் என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தாக்குதல்தாரி இனங்காணப்படவில்லை என்பதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசியல் இலங்கை செய்தி

அரசியல் புயலாக மாறியுள்ள பிரதியமைச்சரின் “குத்தாட்டம்”!

  • December 22, 2025
  • 0 Comments

சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க ஆடிய குத்தாட்டம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பில் சாதகமாகவும், அரசியல் விமர்சன ரீதியாகவும் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன. பேரிடரால் மலையகத்துக்கான ரயில் பாதைகளும் கடுமையாக சேதமடைந்திருந்தன. இந்நிலையில் பதுளை முதல் அம்பேவளை வரையான ரயில் பாதை புனரமைக்கப்பட்டு, சேவை மீள ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 20 ஆம் திகதி சுமார் 23 நாட்களுக்கு பின்னர் உடரட்ட மெனிக்கே ரயில் தனது பயணத்தை மீள ஆரம்பித்தது.இதற்காக விசேட நிகழ்வொன்று […]

இலங்கை உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சுங் திடீர் நீக்கம்: டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு

  • December 22, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” (America First) கொள்கைக்கு முழுமையாக ஒத்துழைக்கும் வகையில் இராஜதந்திரக் கட்டமைப்பை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சுங் (Julie Chung) உட்பட சுமார் 30 நாடுகளின் சிரேஷ்ட தூதர்களைத் திரும்பப் பெற வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. ஜனவரி மாதத்துடன் இவர்களது பதவிக்காலம் முடிவுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் நியமிக்கப்பட்ட இவர்களை நீக்கிவிட்டு, ட்ரம்ப்பின் கொள்கைகளை உலகெங்கும் […]

error: Content is protected !!