இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் 10 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

  • January 10, 2026
  • 0 Comments

யாழ் மாவட்டத்தில் சுமார் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, யாழ்ப்பாணம் பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே ஐந்து சந்திப் பகுதியில்  சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது குறித்த நபரிடமிருந்து சுமார் 3,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

உலகம் செய்தி

அமெரிக்காவின் மிசிசிப்பியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் மரணம் – சந்தேக நபர் கைது

  • January 10, 2026
  • 0 Comments

அமெரிக்காவில்(America) மிசிசிப்பியின்(Mississippi) கிளே கவுண்டியில்(Clay County) நடந்த துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்ட அமலாக்கத் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த தாக்குதல் மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்ததாக NBC செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், “சந்தேக நபர் காவலில் உள்ளார். எங்கள் சமூகத்திற்கு இனி அச்சுறுத்தல் இல்லை” என்று அதிகாரி எடி ஸ்காட்(Eddie Scott) குறிப்பிட்டுள்ளார். மேலும், “பாதிக்கப்பட்டவர்களுக்காக உங்கள் பிரார்த்தனைகளை மேற்கொள்ளுங்கள்” என்று எடி ஸ்காட் தெரிவித்துள்ளார்.

செய்தி விளையாட்டு

2026 டி20 உலக கோப்பை – அயர்லாந்து அணி அறிவிப்பு

  • January 10, 2026
  • 0 Comments

20 அணிகள் பங்கேற்கும் 10வது ஐ.சி.சி டி20 உலக கோப்பை தொடர் 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து அணியின் கேப்டனாக பால் ஸ்டீர்லிங்(Paul Stirling) நியமிக்கப்பட்டுள்ளார். அயர்லாந்து அணி பால் ஸ்டீர்லிங்(Paul Stirling) மார்க் ஆதிர்(Mark Adhir) பென்கால்ட்ஸ்(Pencalds) கேம்பெர்(Camber) டெலனி(Delaney) ஜார்ஜ் டாக்ரெல்(George Dockrell) மேத்யூ […]

பொழுதுபோக்கு

ரவி மோகன் தான் நம்பர் 1 – புகழ்ந்து தள்ளும் கெனிஷா, ஆதங்கத்தை கொட்டி தீர்த்த ஆர்த்தி

  • January 10, 2026
  • 0 Comments

‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் தான் நம்பர் 1” என அவரது தோழி கெனிஷா கருத்து தெரிவித்துள்ளார். சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பராசக்தி’. இப்படத்தில் ரவி மோகன் முதன்முறையாக வில்லனாக நடித்துள்ளார். இன்று காலை படக்குழுவினர் வெவ்வேறு திரையரங்குகளில் ‘பராசக்தி’ படத்தை கண்டுகளித்தனர். சென்னை – காசி திரையரங்கில் இரசிகர்களுடன் படத்தை கண்டு களித்தார் ரவி மோகன். அவருடன் அவரது தோழியான கெனிஷாவும் […]

உலகம் செய்தி

ஈரானில் போராட்டங்கள் தீவிரம் – காயமடைந்தவர்களால் நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்

  • January 10, 2026
  • 0 Comments

ஈரானில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரானிய அதிகாரிகள் கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். இதனிடையே, நாட்டின் மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிகின்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தெஹ்ரானில் உள்ள முக்கிய கண் மருத்துவ மையமான ஃபராபி மருத்துவமனை (Farabi Hospital) தற்போது நெருக்கடி நிலைக்கு சென்றுள்ளதாக ஒரு மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். அவசரமற்ற சேர்க்கைகள் மற்றும் அறுவைச் சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டு, அவசர வழக்குகளைச் சமாளிக்க கூடுதல் ஊழியர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, […]

இந்தியா செய்தி

ஒடிசாவில் அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக தனியார் விமானம் – அறுவர் காயம்

  • January 10, 2026
  • 0 Comments

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமான ஒடிசாவின் புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நகருக்குப் புறப்பட்ட சிறிய ரக தனியார் பயணிகள் விமானமொன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதில் விமானத்தில் இருந்த அறுவரும்சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். சிறிய நகரங்களுக்கும் விமான சேவையை வழங்கும் மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் இந்த விமானத்தை இந்தியா ஒன் ஏர் விமான நிறுவனம் இயக்கியது. புவனேஸ்வரில் இருந்து புறப்பட்ட 50 நிமிடங்களுக்குள், விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு […]

பொழுதுபோக்கு

திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம் ‘பராசக்தி’

  • January 10, 2026
  • 0 Comments

திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம் ‘பராசக்தி’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பராசக்தி’. இந்த படத்தைப் பார்த்துவிட்டு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன். அந்தக் கடிதத்தில், “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, ‘பராசக்தி’ படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் […]

ஐரோப்பா

”புட்டின் அமெரிக்காவிற்கு மட்டுமே அஞ்சுகிறார் ” -ட்ரம்பின் சர்ச்சை கருத்து!

  • January 10, 2026
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் “அமெரிக்காவிற்கு பயப்படுகிறார்”, ஆனால் ஐரோப்பாவிற்கு பயப்படுவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். ஐரோப்பிய தலைவர்களை எச்சரிக்கும் வகையில், நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்றும் பாணியில் , ரஷ்ய ஜனாதிபதியைக் கைப்பற்ற தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், குடியேற்றக் கொள்கைகளில் ஐரோப்பா பின்தங்கியுள்ளது எனவும் விமர்சித்துள்ளார். தான் மட்டும் பதவியில் இல்லையென்றால், இந்நேரம் உக்ரைன் முழுவதையும் ரஷ்யா கைப்பற்றியிருக்கும் என்று ட்ரம்ப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இலங்கை

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்த வருவாய் பாரிய அளவில் அதிகரிப்பு!

  • January 10, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்தோர் மூலம் நாட்டிற்கு கிடைத்த வருமானம் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில், இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து 8.07 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2024 இல் பெறப்பட்ட 6.575 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது 22.8% அதிகமாகும். வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் மொத்தம் 879.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை தங்கள் குடும்பங்களுக்கு […]

ஐரோப்பா செய்தி

புயல் கோரெட்டி – மரம் வீழ்ந்ததில் ஒருவர் பலி

  • January 10, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் கார்ன்வாலின் ஹெல்ஸ்டன் (Helston, Cornwall) அருகே மாவ்கன் (Mawgan) பகுதியில், புயல் கோரெட்டி (Goretti) காரணமாக வீடொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அதிகாரிகள், மரத்தை பாதுகாப்பாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தில் 50 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, புயல் காரணமாக இங்கிலாந்தின் தென்மேற்கில் 34,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தற்போது வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அதிகாரிகள் தொடர்ச்சியாக மறுசீரமைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளதாக […]

error: Content is protected !!