இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கிய மத்துகம பெண்ணிற்கு விளக்கமறியல்!
இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மதுகமவைச் சேர்ந்த பெண்ணை அக்டோபர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்துகம, வெலிபென்னவில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளரான 52 வயது பெண்ணிற்கே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்துகமவைச் சேர்ந்த அந்தப் பெண்ணை முதலில் நீதித்துறை மருத்துவ அதிகாரி (ஜே.எம்.ஓ) பரிசோதனை செய்த பின்னர் கொழும்பு குற்றப்பிரிவு (சி.சி.டி) அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். […]