உலகம்

கனடாவில் பாரிய தங்கக்கொள்ளை – முக்கிய சூத்திரதாரி கைது!

  • January 13, 2026
  • 0 Comments

கனடா வரலாற்றில் மிகப்பெரிய தங்கக் கொள்ளையில் ஈடுபட்ட சூத்திரதாரிகளில் ஒருவரான அர்சலான் சவுத்ரி (Arsalan Chaudhary) டொராண்டோவின் பியர்சன் (Toronto’s Pearson) சர்வதேச  விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 5000 இற்கும் அதிகமான திருட்டு குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. “புராஜெக்ட் 24 காரட்”  (Project 24 Carat) என்று அழைக்கப்படும் பரந்த அளவிலான விசாரணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். சுமார் $15 மில்லியன் மதிப்புள்ள 6,600 […]

உலகம்

தனது சொந்த நலனுக்காக மற்ற நாடுகளை பகடைகாயாக்கும் அமெரிக்கா!

  • January 13, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தில் தனது நலன்களைப் பேணுவதற்கு அமெரிக்கா மற்ற நாடுகளை “சாக்குப்போக்காக” பயன்படுத்தக்கூடாது என்று சீனா குறிப்பிட்டுள்ளது. கிரீன்லாந்தை ரஷ்யா அல்லது சீனா கையகப்படுத்துவதைத் தடுக்க, அதை கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் கூறியுள்ள நிலையில் சீனாவின் கருத்துக்கள் வந்துள்ளன. இது தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், ஆர்க்டிக்கில் சீனாவின் நடவடிக்கைகள் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, மேலும் […]

பொழுதுபோக்கு

விழிகளுக்கு விருந்தளிக்க வருகிறாள் “தாய் கிழவி”!

  • January 13, 2026
  • 0 Comments

எதிர்வரும் 20 ஆம் திகதி திரையிடப்படவுள்ள “தாய் கிழவி” படம் தொடர்பில் புதிய ‘அப்டேட்’ வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் செயற்கைக்கோள் உரிமத்தை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை ஜீயோ ஹாட்ஸ்டாரும் பெற்றுள்ளது என படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகை ராதிகா நடித்துள்ள புதிய படம் ‘தாய் கிழவி’.   இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 […]

உலகம் செய்தி

ட்ரம்பிற்கு பதிலடி கொடுத்த கியூபா : பேச்சுவார்த்தைகள் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்!

  • January 13, 2026
  • 0 Comments

வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பை தொடர்ந்து கியூபா காலதாமதமின்றி உடன்பாடு ஒன்றை எட்ட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்டுள்ள கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கேனல் (Miguel Díaz-Canel) தனது நிர்வாகம் அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தாது எனக் கூறியுள்ளார். “அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையிலான உறவுகள் முன்னேற, அவை விரோதம், அச்சுறுத்தல்கள் மற்றும் பொருளாதார வற்புறுத்தலை விட சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்” என்று கியூப […]

இலங்கை செய்தி

16 ஆம் திகதி விடைபெறும் அமெரிக்க தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

  • January 13, 2026
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chang , ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை Anura Kumara Dissanayake சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி கொழும்பில் இருந்து வெளியேறுகின்றார் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங். இந்நிலையில் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார். இதன்போது, ஜூலி சாங் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி […]

உலகம்

ஈரானோடு வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் வரி விதிக்கப்படும்!

  • January 13, 2026
  • 0 Comments

ஈரானுடன் வணிகம் செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் 25% வரி விதிக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வரி நேற்று முதல் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது. “அதிகரித்து வரும்” போராட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கோள் காட்டி அந்நாட்டில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்க குடிமக்கள் தொடர்ந்து இணையத் தடைகளை எதிர்பார்க்க வேண்டும்,. மாற்றுத் தொடர்பு வழிகளைத் திட்டமிட […]

விளையாட்டு

ஆடு களத்துக்கு விடை கொடுக்கிறது பெண் சிங்கம்!

  • January 13, 2026
  • 0 Comments

  சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார் முன்னணி வீராங்கனையான அலிசா ஹீலி Alyssa Jean Healy. ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் அலிசா ஹீலி. விக்கெட் காப்பாளரான இவர், அதிரடி தொடக்க ஆட்டக்காரராகவும் திகழ்கின்றார். மெக் லானிங்கின் ஓய்வுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய மகிளிர் அணியின் தலைமைப் பொறுப்பேற்று அணியை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அலிசா ஹீலி அறிவித்துள்ளார். அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறும் டி20 மற்றும் […]

இந்தியா

அயோத்திக்குள் முஸ்லிம்கள் நுழையத் தடை: கோரிக்கை முன்வைப்பு!

  • January 13, 2026
  • 0 Comments

முஸ்லிம் மக்கள், அயோத்தியில் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலைக் காண முஸ்லிம்களும் அனுமதிக்கப்படுகின்றனர். எனினும், கருவறைக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் ராமர் கோயிலில் கடந்த வாரம் முஸ்லிம் இளைஞர் ஒருவர், சால்வை விரித்து தொழுகையில் ஈடுபட முயற்சித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு தரப்பினர் இளைஞரை தடுத்து நிறுத்தினர். விசாரணைக்கு பிறகு அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் அயோத்தியைச் […]

உலகம்

கீரின்லாந்து விடயத்தில் அமெரிக்காவோடு போட்டிக்கு நிற்கும் ரஷ்யா!

  • January 13, 2026
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆர்க்டிக் தீவைப் பாதுகாக்க விரைவாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கிரீன்லாந்து மக்கள் ரஷ்யாவுடன் சேர வாக்களிக்கலாம் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் ( Dmitry Medvedev) நேற்று தெரிவித்துள்ளார். கிரீன்லாந்தில் வசிக்கும் 55000 மக்களும் ரஷ்யாவுடன் சேர வாக்களிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் என சூளுரைத்துள்ளார். இதற்காக  இராணுவ பலத்தை பிரயோகிப்பதையும் அவர் மறுக்கவில்லை. […]

இலங்கை செய்தி

22 ஆம் திகதி இலங்கை வருகிறது IMF குழு!

  • January 13, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் (IMF) குழவினர் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர். பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் கடன் தொடர்பில் 5ஆவது மீளாய்வு கூட்டத்துக்காகவே இவர்கள் இலங்கை வருகின்றனர். இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட குறைநிரப்பு பிரேரணை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என தெரியவருகின்றது.

error: Content is protected !!