இலங்கை செய்தி

இலங்கைக்கு அமெரிக்கா மேலும் 2 மில்லியன் டொலர் உதவி

  • January 13, 2026
  • 0 Comments

டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவுவதற்காக மேலும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் இன்று (ஜனவரி 13, 2026) அறிவித்துள்ளது. இதன் மூலம் இச்சம்பவம் தொடர்பில் அமெரிக்கா வழங்கியுள்ள மொத்த மனிதாபிமான உதவித் தொகை 4 மில்லியன் டொலர்களாக (சுமார் 1.2 பில்லியன் ரூபா) அதிகரித்துள்ளது. இந்த நிதி உதவியானது அம்பாறை, பதுளை, கம்பஹா, கேகாலை, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தின் தோட்டப் பகுதிகளிலும் உள்ள மக்களின் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக பணிப்புரிபவர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டது!

  • January 13, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வேலை செய்வதற்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகள் அமுலில் உள்ளபோதும்,  சட்டவிரோதமாக வேலை செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த காலத்தோடு ஒப்பிடும்போது கணிசமாக அதிகரித்துள்ளது. நெயில் பார்கள் மற்றும் டேக்அவே (takeaways) போன்ற இடங்களில் பெரும்பாலானவர்கள் சட்டவிரோதமாக பணிப்புரிவதாக கண்டறிப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக வேலை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட 59 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி 2025 ஆம் ஆண்டில் மட்டும்  8,971 நபர்கள் கைது  செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக வேலை செய்பவர்களை […]

அரசியல் இலங்கை செய்தி

2 நாளாக தொடர்கிறது விமலின் போராட்டம்: அரசியல் நாடகமென கடும் விமர்சனம்!

  • January 13, 2026
  • 0 Comments

கல்வி அமைச்சு பதவியில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய Harini Amarasooriya விலக வேண்டும் என வலியுறுத்தி விமல் வீரவன்சவால் Wimal Weerawansa முன்னெடுக்கப்படும் போராட்டம், இன்று (13) இரண்டாவது நாளாக தொடர்கின்றது. கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியை பிரதமர் துறக்க வேண்டும் ஆகிய இரு விடயங்களை வலியுறுத்தி கல்வி அமைச்சுக்கு முன்பாக தனது சகாக்களுடன் விமல் வீரவன்ச சத்தியாக்கிரகப் போராட்டத்தை நேற்று (12) ஆரம்பித்தார். பிரதமர்மீது கடும் விமர்சனங்களையும் முன்வைத்தார். அரச […]

செய்தி பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயன் : வெங்கட் பிரபு கூட்டணி உறுதி

  • January 13, 2026
  • 0 Comments

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வந்துள்ள “பராசக்தி” திரைப்படம் வசூல் ரீதியாகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், அவரது அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ள இந்தப் புதிய திரைப்படத்தில், இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படம் வெங்கட் பிரபுவின் முந்தைய ஹிட் படமான ‘மாநாடு’ பாணியில், மிகவும் வித்தியாசமான மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, ‘மாநாடு’ […]

இலங்கை செய்தி

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் இன்று திடீர் வேலைநிறுத்தம்

  • January 13, 2026
  • 0 Comments

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தீர்மானத்திற்கு அமைய, இன்று கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீது சுமத்தப்பட்டுள்ள நிதி மற்றும் நிர்வாக மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து, அவரை அப்பதவியிலிருந்து நீக்கக் கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள போதனா வைத்தியசாலை உட்பட சுமார் 180-க்கும் மேற்பட்ட சுகாதார […]

இந்தியா

தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைவோம்: இந்தியா, ஜேர்மன் அழைப்பு!

  • January 13, 2026
  • 0 Comments

“ தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.” இவ்வாறு இந்தியா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜேர்மன் பிரதமர் பிரட்ரிக் மெர்ஸ், பிரதமர் மோடியுடன் இரு தரப்பு சந்திப்பின் ஈடுபட்டார். இதன்போதே இரு நாட்டு பிரதமர்களும் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர். ரஷ்யா, உக்ரைன் மோதல், காசா நிலைமை மற்றும் பிற உலகளாவிய சவால்கள் குறித்தும் இருவரும் விரிவாக பேச்சு நடத்தியுள்ளனர். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைதியான முறையில் தீர்வு […]

இலங்கை செய்தி

உலக பொருளாதார மாநாடு 19 ஆம் திகதி ஆரம்பம்: பிரதமர் ஹரிணி பங்கேற்பு!

  • January 13, 2026
  • 0 Comments

உலக பொருளாதாரமன்ற World Economic Forum மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் Switzerland டாவோஸ் Davos நகரில் ஆரம்பமாகின்றது. 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் இலங்கை சார்பில பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya பங்கேற்கின்றார். பிரதி நிதியமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அவருடன் செல்கின்றனர். குறித்த விஜயத்தின்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார். முதலீட்டு […]

உலகம்

ஈரானில் அதிகரிக்கும் பதற்ற நிலையில் – சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

  • January 13, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில் இன்று கச்சா எண்ணெயின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன்படி ஒரு பீப்பாய்க்கு 28 காசுகள் அல்லது 0.4 சதவீதம் உயர்ந்து $64.15 டொலராக  அதிகரித்துள்ளது. அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் 28 காசுகள் அல்லது 0.5 சதவீதம் உயர்ந்து 59.78 டொலராக அதிகரித்துள்ளது. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றான ஈரானில் அதிகரித்துள்ள உள்நாட்டு மோதல்கள் எண்ணெய் உயர்விற்கு பிரதானமாக பங்களித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கிடையே […]

இலங்கை

4800 நிலச்சரிவு ஏற்படும் இடங்கள் அடையாளம் – செயற்கைக்கோள் தரவுகள் வெளியீடு!

  • January 13, 2026
  • 0 Comments

நாட்டில் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடிய 4,800 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிட்வா சூறாவளிக்குப் பிறகு நடத்தப்பட்ட செயற்கைக்கோள் அடிப்படையிலான மதிப்பீடுகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக  கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் குமாரி மீகஹகொடுவ தெரிவித்துள்ளார். இந்த வரைபடங்களின் பகுப்பாய்வில், ஊடகங்கள் மூலம் இதுவரை அறிவிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை விட உண்மையான நிலச்சரிவுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை செய்தி

ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார்!

  • January 13, 2026
  • 0 Comments

இலங்கையில் நடந்த போரின்போது களமுனைச் செய்திகளை விவரணங்களாக எழுதிய, சர்வதேச புகழ்பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் இன்று (13) காலமானார். இறக்கும்போது அவருக்கு 81 வயது என்பதுடன், அவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை 9.00 மணி முதல் தெஹிவளை அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படவுள்ளது. இறுதிச் சடங்குகள் இன்று (13) பிற்பகல் தெஹிவளை பெரிய பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்களிலும் இவர் […]

error: Content is protected !!