இலங்கை செய்தி

தைத்திருநாளன்று ஹங்குராங்கெத்தையில் தீக்கிரையான  வீடுகள் –  பெரும் சோகத்தில் மக்கள்

  • January 15, 2026
  • 0 Comments

ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹேட்ட, ரூக்வூட் (Rookwood) கொலம்பியா தோட்டத்தில் இன்று (15) மதியம் ஏற்பட்ட திடீர் தீப்பரவல் காரணமாக  10 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இதனால் வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. தைப்பொங்கல் பண்டிகையை இன்று சிறப்பாகக் கொண்டாடி வந்த மக்களின் வீடுகளே  தீக்கிரையாகியதால் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பிரதேச பொதுமக்கள் ஒன்றிணைந்து கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக […]

இலங்கை செய்தி

காலி முகத்திடலின் மின்கம்பமொன்றில் ஏறி ஒருவர் போராட்டம்

  • January 15, 2026
  • 0 Comments

காலி முகத்திடலின் மின்கம்பமொன்றில் ஏறி ஒருவர் போராட்டம் காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். இந்நிலையில் குறித்த நபரை  மீட்டு அவருக்குத் தேவையான முதலுதவிகளை வழங்கும் நோக்கில் 1990 அவசர நோயாளர் காவு சேவை அதிகாரிகளும் அவ்விடத்திற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகம்

அமெரிக்காவில் மற்றுமொரு குடியேறி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட ICE முகவர்!

  • January 15, 2026
  • 0 Comments

மினியாபோலிஸில் குழப்பமான போராட்டங்களுக்கு மத்தியில், ICE முகவரால் மற்றுமொரு நபர் மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பனி மண்வெட்டி மற்றும்  துடைப்பக் கைப்பிடியால் ( broom handle) தாக்கப்பட்டதை தொடர்ந்து உயிருக்கு பயந்து முகவர்  துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. வெனிசுலா குடியேறி ஒருவரின்  காலில் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர் நிலையான நிலையில் இருப்பதாகவும், முகவர் மருத்துவ சிகிச்சை பெற்றதாகவும், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கிச்சூடு […]

புகைப்பட தொகுப்பு

பொங்கல் வைப்ஸில் திவ்ய பாரதி  – இன்ஸ்டாவை கலக்கும் புகைப்படங்கள்

  • January 15, 2026
  • 0 Comments

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே அதிக கிளாமருடன் நடித்து ஒட்டுமொத்த இளைஞர்கள் கூட்டத்தையும் தன் பக்கம் ஈர்த்துக்கொண்டார். இரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்த திவ்யபாரதிக்கு ஒருகட்டத்தில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது. பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் சின்ன ரோலில் நடித்து […]

ஐரோப்பா செய்தி

கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து ராபர்ட் ஜென்ரிக் நீக்கம்

  • January 15, 2026
  • 0 Comments

பிரித்தானிய எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் கெமி பேடனாக்கிற்குப் (Kemi Badenoch) போட்டியாளராக விளங்கிய ராபர்ட் ஜென்ரிக் (Robert Jenrick), நிழல் அமைச்சரவையிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஜென்ரிக் ரகசியமாக வேறு கட்சிக்குத் தாவத் திட்டமிட்டதற்கான “மறுக்க முடியாத ஆதாரங்கள்” கிடைத்துள்ளதாகக் கூறி, அவரது கட்சி உறுப்புரிமையை பேடனாக் இடைநீக்கம் செய்துள்ளார். “அரசியல் நாடகங்களால் மக்கள் சலிப்படைந்துள்ளனர்; பழைய தவறுகளைத் திரும்பச் செய்யமாட்டேன்” எனப் பேடனாக் தெரிவித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை பிரித்தானிய […]

உலகம் செய்தி

சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவி நீக்கம்

  • January 15, 2026
  • 0 Comments

சிங்கப்பூர் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் (Pritam Singh,) அந்தப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றக் குழுவிடம் பொய்யான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் பிரீதம் சிங் குற்றவாளியாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இப்பதவிக்குத் தகுதியற்றவர் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக, எதிர்க்கட்சித் தலைவருக்கான கூடுதல் கொடுப்பனவுகள் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களில் முதலில் பதிலளிக்கும் முன்னுரிமை போன்ற சலுகைகளை அவர் இழக்கிறார். இருப்பினும், […]

உலகம்

மேற்கத்தேய நாடுகளின் நடவடிக்கை – ஈரானில் மரண தண்டனை நிறுத்திவைப்பு!

  • January 15, 2026
  • 0 Comments

ஈரானில் மரணதண்டனை நிறைவேற்றுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். முன்னதாக பாதுகாப்புப் படையினரால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், “உதவி வந்து கொண்டிருக்கிறது” என்று ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதற்கிடையே இங்கிலாந்து தனது தெஹ்ரான் தூதரகத்தை மூடிவிட்டு ஊழியர்களை திரும்பப் பெற்றுள்ளது, அதே நேரத்தில் போலந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அமைதியின்மை காரணமாக தங்கள் குடிமக்களை ஈரானை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தின. கத்தாரில் உள்ள இராணுவத் தளங்களில்  உள்ள பணியாளர்களை அமெரிக்கா குறைத்து […]

ஐரோப்பா

இராணுவ குழுவினரை கிரீன்லாந்திற்கு அனுப்பும் பிரித்தானியா!

  • January 15, 2026
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் இராணுவ அதிகாரி ஒருவரின் தலைமையில் குழுவொன்றை  கிரீன்லாந்திற்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்பின் கீரீன்லாந்து மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தொடர்ந்து பல நட்பு நாடுகளின் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மேற்படி இராணுவ குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். பிரித்தானியாவை போலவே ஜெர்மனி, சுவீடன், நோர்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் பணியாளர்களை அனுப்பவுள்ளன. இதேவேளை இந்த விடயம் தொடர்பில் டேனிஸ் பிரதமர் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தகது.

ஆஸ்திரேலியா செய்தி

விக்டோரியாவில் ஏடிஎம் கொள்ளை ; இருவர் கைது

  • January 15, 2026
  • 0 Comments

விக்டோரியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக ஏடிஎம் இயந்திரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் முதல் ஒன்பது இடங்களில் திருடப்பட்ட இழுவை லொரிகளை (Tow Trucks) பயன்படுத்தி, வணிக நிறுவனங்களின் சுவர்களை உடைத்து இவர்கள் ஏடிஎம்களை திருடியுள்ளனர். இதில் ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஃபேர்ஃபீல்ட் (Fairfield) மற்றும் பென்ட்லீ ஈஸ்ட் (Bentleigh East) உள்ளிட்ட பகுதிகளில் நான்கு ஏடிஎம்கள் […]

ஐரோப்பா

உக்ரைனில் அவசரகால நிலை அறிவிப்பு!

  • January 15, 2026
  • 0 Comments

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), எரிசக்தித் துறையில் இன்று அவசரகால நிலையை அறிவித்துள்ளார். நாட்டின் உள்கட்டமைப்பு மீதான தொடர்ச்சியான ரஷ்ய தாக்குதல்களைத் தொடர்ந்து தடைபட்ட மின்சார விநியோகத்தை நிவர்த்தி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். குறிப்பாக கடந்த வாரம் கியேவில், மின்சாரம் மற்றும் வெப்பத்தை மீட்டெடுக்க பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. இரவு நேர வெப்பநிலை -20C க்கு அருகில் குறைந்து வருவதால், மக்கள் குளிரில் சிக்கி தவிக்கின்றனர். அத்துடன் பழுதுபார்க்கும் […]

error: Content is protected !!