உலகம் செய்தி

பார்சிலோனாவில் விமானம் அவசரமாக தரையிறக்கம்

  • January 15, 2026
  • 0 Comments

ஸ்பெயின்- பார்சிலோனாவில்  துருக்கிய விமானமொன்று இன்று அவசரமாக தரையிறங்கியுள்ளது. விமானத்தில் உள்ள ஒரு பயணி, இணையத்தில் வலையமைப்பொன்றை உருவாக்கி, அதில் வெடிகுண்டு மிரட்டல் குறியீட்டை வைத்து இருப்பதாகக் கண்டறியப்பட்டதால் விமானம் தரையிரக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்பெயினின் சிவில் காவல் துறை விசாரணையை மேற்கொண்டுள்ளது.

ஐரோப்பா முக்கிய செய்திகள்

இரட்டை குடியுரிமை கொண்ட பிரித்தானியா வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

  • January 15, 2026
  • 0 Comments

இரட்டை குடியுரிமை பெற்ற மக்கள் இனிமேல் பிரித்தானியர்கள் அல்லாத கடவுச்சீட்டை மட்டும் பயன்படுத்தி பிரித்தானியாவிற்குள் நுழைய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை வரும் பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. புதிய விதிகளின்படி இனி பிரித்தானியாவிற்குள் நுழைய முயற்சிப்பவர்கள் பிரித்தானிய கடவுச்சீட்டு   அல்லது உரிமைச் சான்றிதழை வழங்க வேண்டும். இந்த மாற்றம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ளவர்கள் உட்பட, வெளிநாடுகளில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அனைத்து மக்களுக்கும் பொருந்தும். உள்துறை அலுவலகத்தின் […]

உலகம்

புறப்பட்ட ஏழு நிமிடத்தில் உணரப்பட்ட அசாதாரண வாசனை – ஆக்லாந்திற்கே திரும்பிய விமானம்!

  • January 15, 2026
  • 0 Comments

நியூசிலாந்தின் ஆக்லாந்திலிருந்து (Auckland) கனடாவின் வான்கூவருக்குச் (Vancouver) பயணித்த ஏர் கனடா ( Air Canada ) விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் ஆக்லாந்திற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. ஏர் கனடா விமானியின் காக்பிட்டில்  (cockpit) “அசாதாரண வாசனை இனங்காணப்பட்டமையால் குறித்த விமானம் திருப்பிவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணம் தொடங்கிய ஏழு நிமிடங்களில் விமானிகள் அவசரநிலையை அறிவித்ததாகவும், உடனடியாக யூடர்ன் எடுக்கப்பட்டு ஆக்லாந்திற்கு திரும்பியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த எச்சரிக்கையுடன் விமானம் தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் […]

செய்தி விளையாட்டு

கடந்த மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை வென்ற மிட்செல் ஸ்டார்க்

  • January 15, 2026
  • 0 Comments

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய கடைசியாக 3 வீரர்கள் கொண்ட இறுதிப் பட்டியலை வெளியிட்டது. இதில், நியூசிலாந்தின்(New Zealand) ஜேக்கப் டஃபி(Jacob Duffy), வெஸ்ட் இண்டீஸின்(West Indies) ஜஸ்டின் கிரீவ்ஸ்(Justin Greaves) மற்றும் ஆஸ்திரேலியாவின்(Australia) ட்செல் ஸ்டார்க்(Mitchell Starc) பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் ஐசிசியின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

கிரீன்லாந்தில் குவிக்கப்பட்ட ஐரோப்பிய இராணுவ படைகள் – ட்ரம்பின் உரிமை பேச்சால் பதற்றம்

  • January 15, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தின் தலைநகர் நூக்கில் இற்கு 15 பேர் கொண்ட பிரெஞ்சு இராணுவக் குழுவொன்று சென்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டு வரும் உளவுப் பணியின் ஒரு பகுதியாக இந்தக் குழு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க்கின் அரை தன்னாட்சி பகுதியாக உள்ள கிரீன்லாந்து மீது தொடர்ந்து உரிமை கோரி வரும் நிலையில், ஜெர்மன், ஸ்வீடன், நோர்வே, நெதர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களும் இந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளதாக சர்வதேச […]

இலங்கை செய்தி

காசிகோட் யானை சுரங்கப்பாதை பணிகள் ஜனவரி 19 இல் மீண்டும் தொடக்கம்

  • January 15, 2026
  • 0 Comments

காசிகோட் யானை சுரங்கப்பாதை திட்டத்தின் பணிகள், கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து செய்யப்பட்ட விரிவான ஆய்வுக்குப் பின்னர், ஜனவரி 19 ஆம் திகதி மீண்டும் தொடங்கப்பட உள்ளன. ரயில்வே துறை சமர்ப்பித்த கூட்டு ஆய்வு அறிக்கையில், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீடு இன்றி முன்பு கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதையில் சில முக்கிய குறைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மனித-யானை மோதல்களை குறைக்கும் நல்ல நோக்குடன் உருவாக்கப்பட்ட முக்கிய திட்டமாக இது கருதப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதுள்ள குறைகளை […]

#Karthi #Pongal2026 #VaaVaathiyaar #ThaiPongal #KarthiFans #TamilCinema பொழுதுபோக்கு

‘வா வாத்தியார்’ கொண்டாட்டங்களுக்கு மத்தியில் கார்த்தியின் உருக்கமான பொங்கல் வாழ்த்து!

  • January 15, 2026
  • 0 Comments

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், நடிகர் கார்த்தி தனது ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “பொங்கல் பொங்கட்டும்! உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும்! உழவர்களின் வாழ்வு சிறக்கட்டும்! அனைவருக்கும் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!” எனக்கூறி அவர் பொங்கல் பானையுடன்தனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் தனது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், விவசாயிகளின் வாழ்வு சிறக்க வேண்டும் […]

ஐரோப்பா

UKவில் பொது இடங்களில் புற்றுநோயை உண்டாக்கும் கண்ணுக்கு புலப்படாத இரசாயனம் கண்டுப்பிடிப்பு!

  • January 15, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள குழந்தைகள் விளையாட்டு பூங்காக்களில் புற்றுநோய் மற்றும் பிற கடுமையான உடல்நலக் கோளாறுகளுடன் தொடர்புடைய களைக்கொல்லியான கிளைபோசேட்டின் (glyphosate)  எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பிரித்தானியாவின் பூச்சிக்கொல்லி நடவடிக்கை வலையமைப்பு (PAN UK) முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 13 விளையாட்டு பூங்காக்களில் சுமார் 08 பூங்காக்களில்  கிளைபோசேட்டின்  களைக்கொல்லியுடன் தொடர்புடைய எச்சங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் வளரும் களைகளை அகற்றுவதற்கு இங்கிலாந்து கவுன்சில்கள்  கிளைபோசேட்டினை  (glyphosate) பரவலாக பயன்படுத்துகின்றனர். […]

செய்தி தமிழ்நாடு

எல்லோருக்கும் எல்லாம் – சமத்துவ பொங்கல் நிகழ்வில் ஸ்டாலின் கருத்து

  • January 15, 2026
  • 0 Comments

எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவ நிலையை அடைய திராவிட மாடல் அரசு செயல்படுவதாக சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அனைத்துத் துறை பணியாளர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த ஸ்டாலின், ”எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி சமத்துவ நிலையை அனைவரும் அடைந்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு, நமது திராவிட மாடல் அரசு பணியாற்றி வருகிறது. அதற்காக கடினமாக அரசு […]

இலங்கை செய்தி

பொங்கல் விழாவில் தமிழ் மக்களிடம் ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி!

  • January 15, 2026
  • 0 Comments

  எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம், வேலணை, ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) பிற்பகல் நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “தமிழ் மக்களின் முக்கியமானதொரு கலாசார தினமாக தைப்பொங்கல் தினத்தில் உங்களுடன் இணைவதற்கு வாய்ப்புக் […]

error: Content is protected !!