உலகம் செய்தி

80 வயதில் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா

  • November 3, 2025
  • 0 Comments

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா(Khaleda Zia) பிப்ரவரி மாதம் எதிர்பார்க்கப்படும் தேர்தலில் போட்டியிடுவார் என்று அவரது அரசியல் கட்சி தெரிவித்துள்ளது. 80 வயதான கலீதா ஜியா,மூன்று தொகுதிகளில் போட்டியிடுவார் என்று மூத்த வங்கதேச தேசியவாதக் கட்சித் தலைவரான மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர்(Mirza Fakhrul Islam Alamgir) உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், 2008 முதல் பிரித்தானியாவில் வசிக்கும் கலீதா ஜியாவின் 59 வயது மகன் தாரிக் ரஹ்மானும்(Tarique Rahman) தேர்தலில் போட்டியிடுவார் என்று மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் […]

செய்தி விளையாட்டு

இந்தியாவிற்கு எதிரான T20 தொடரில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்

  • November 3, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டின் ஆசிய கோப்பை வெற்றியாளர்களான பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. அதனை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் கம்சட்கா (Kamchatka) பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • November 3, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் கம்சட்கா (Kamchatka)  பிராந்தியத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று  5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 28 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. இதேவேளை கடந்த சில நாட்களாகவே ரஷ்யாவின் கம்சட்கா  பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

உலகம் செய்தி

உணவு உதவி சலுகைகளை இழக்கும் 42 மில்லியன் அமெரிக்கர்கள்!

  • November 3, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் கருவூலத்துறை நிதி பற்றாக்குறை பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது. ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையிலான வாத பிரதிவாதங்கள் செலவீன சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. இதன்காரணமாக பெரும்பாலான அரச ஊழியர்கள் சம்பளத்தை இழந்துள்ளனர். ஏறக்குறைய 4000 பேர் ஊதியத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் உச்சநீதிமன்றம் மறு அறிவிப்புவரை மூடப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள்  உணவு உதவி சலுகைகளை இழக்க நேரிடும் எனவும், சுகாதார மானியங்களும் காலாவதியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சிக்கல் நிலையை […]

பொழுதுபோக்கு

பாக்ஸ் ஆபிஸில் மீண்டும் சாதனை படைக்கு ”பாகுபலி தி எபிக்“

  • November 3, 2025
  • 0 Comments

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் இந்தியாவைத் தாண்டி உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில், பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் என பலரும் நடித்திருந்தனர். 2015ஆம் ஆண்டு முதல் பாகம் வெளிவந்த நிலையில், 2017ஆம் ஆண்டு பாகுபலி 2 வெளிவந்தது. பாகுபலி படம் வெளிவந்து 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், இரண்டு பாகங்களையும் சேர்த்து பாகுபலி தி எபிக் என்கிற படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளனர். கடந்த வாரம் திரைக்கு […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஸ்கேனர்கள் நிறுவப்படுமா?

  • November 3, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த சனிக்கிழமை ரயிலில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில் செய்தியாளர் ஒருவர்  ரயில் நிலையங்களில் விமான நிலைய பாணி பாதுகாப்பு ஸ்கேனர்கள் நிறுவப்படுமா என போக்குவரத்துச் செயலாளரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த போக்குவரத்து செயலாளர்,  இந்த திட்டத்தை அமுல்படுத்துவது சாத்தியமற்றது எனக் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், மக்கள் பலர் இந்த திட்டம் குறித்து யோசிக்கக்கூடும்.  எங்களிடம் இங்கிலாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான […]

உலகம்

ஐரோப்பிய நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை வழங்கும் சீனா!

  • November 3, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளுக்கான விசா இல்லாத நுழைவுக் கொள்கையை நீட்டிப்பதாக சீனா இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிசம்பர் 31, 2026 வரை விசா இல்லாத கொள்கை நீட்டிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அத்துடன் வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் சுவீடனும் இந்த திட்டத்தில்  உள்வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா, வணிகப் பயணம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் சொந்த வீடுகளை வைத்திருப்போருக்கு சிக்கல் – அதிகரிக்கப்படும் வரி கட்டணங்கள்!

  • November 3, 2025
  • 0 Comments

பிரெக்சிட்டில் இருந்து பிரித்தானியா விலகிய பிறகு நிதி பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன் £30 பில்லியன்களை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய சான்சலர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) வீடுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்களை இரட்டிப்பாக்குவது தொடர்பில் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பிரித்தானியாவில் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இந்த சாத்தியமான நடவடிக்கை சில வீட்டு உரிமையாளர்களுக்கு வருடாந்திர பில்கள் […]

உலகம் செய்தி

இரகசிய அணுவாயுத சோதனை – ட்ரம்பின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் சீனா!

  • November 3, 2025
  • 0 Comments

ரஷ்யாவும், சீனாவும் இரகசியமாக நிலத்திற்கு கீழ் அணுவாயுதங்களை சோதனை செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ள நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்களை சீனா மறுத்துள்ளது. இது தொடர்பில் பெய்ஜிங்கில் நடந்த வழக்கமான செய்தியாளர் கூட்டத்தில் பேசிய செய்தி தொடர்பாளர் மாவோ நிங்,   ட்ரம்பின் கூற்றுக்களை மறுத்துள்ளார். “பொறுப்பான அணு ஆயுத நாடாக, சீனா எப்போதும் தற்காப்பு அணுசக்தி மூலோபாயத்தை நிலைநிறுத்தி செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார். சீனா அமைதியான வளர்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளது, அணு ஆயுதங்களை ‘முதலில் பயன்படுத்துவதில்லை’ என்ற […]

உலகம் செய்தி

இரகசியமாக நிலத்திற்கு அடியில் அணுவாயுதங்களை சோதனை செய்யும் ரஷ்யா, சீனா?

  • November 3, 2025
  • 0 Comments

ரஷ்யாவும், சீனாவும் யாரும் அறியாத வகையில் நிலத்திற்கு அடியில் அணுவாயுத சோதனைகளை நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவ்வாறான அணுவாயுத சோதனைகளை அமெரிக்காவும் நடத்தும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். CBS இன் 60 நிமிட நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்மையில் ரஷ்யா நீருக்கடியில் பியூரெவெஸ்ட்னிக் (Burevestnik) ஏவுகணையை சோதனை செய்தது. இதனைத் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு பின் ஏவுகணை சோதனையை நடத்துமாறு ட்ரம்ப் தனது துருப்புகளுக்கு உத்தரவு […]

error: Content is protected !!