செய்தி விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் 297 ஓட்டங்கள் குவித்த இந்தியா

  • November 2, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில், நவி மும்பையில்(Navi Mumbai) நடைபெறும் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகின்றன. நாணய சுழற்சியை வென்று தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் […]

இலங்கை

வியட்நாமில் நடைபெறும் ஐ.நா சைபர் குற்ற மாநாட்டில் பங்கேற்ற இலங்கை!

  • November 2, 2025
  • 0 Comments

வியட்நாமில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் சைபர் குற்ற மாநாட்டில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில்  இரண்டு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. அதில் இலங்கையும் ஒன்று. இலங்கையின் சார்பாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளர் வருண ஸ்ரீ தனபால இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டார். இந்த மாநாடு, சைபர் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதையும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை இப்போது மூன்று மாதங்களுக்குள் ஒப்புதலுக்குத் தயாராகும் வகையில் அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

நீருக்கடியில் மூழ்கும் உலகின் பெருநகரங்கள்!

  • November 2, 2025
  • 0 Comments

உலகெங்கிலும் உள்ள நகரங்கள்  275 ஆண்டுகளில் நீருக்கடியில் மூழ்கும் என ஆய்வொன்று தெரிவித்துள்ளது. பாரிஸில் (Paris)  உள்ள சோர்போன் பல்கலைக்கழக (Sorbonne University) விஞ்ஞானிகள் ஆய்வை மேற்கொண்டு முடிவை வெளியிட்டுள்ளனர். ஆய்வாளர்களின் கணிப்பு படி 2300 ஆம் ஆண்டளவில் அண்டார்டிகாவின் பனி 59 சதவீதம் வரை உருகுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது நடந்தால் கடல் மட்டம் 10 மீற்றர் வரை உயரும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தில், ஹல் (Hull), கிளாஸ்கோ (Glasgow) மற்றும் பிரிஸ்டல் (Bristol)ஆகியவை நீரில் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் பணத்தை பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோர்!

  • November 2, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகள் நாட்டை விட்டு வெளியேற பணம் செலுத்தப்பட்டுள்ள போதிலும் அவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தகவல்  வெளியாகியுள்ளது. உள்துறை அலுவலகத்தின் உதவி தன்னார்வ திரும்பும் திட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஆலோசனையை தனிநபர்கள் பின்பற்றியுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் பிரித்தானியாவை விட்டு தானாக வெளியேற விரும்புவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதேபோல் விமான டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டன. இருப்பினும், புதிதாக வெளிவந்த சான்றுகள், பணத்தை  பயன்படுத்திய சில சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்கள், நாட்டை விட்டு […]

பொழுதுபோக்கு

ஜீ தமிழ் மூன்றாவது பைனலிஸ்ட்டாக தெரிவுசெய்யப்பட்டார் இலங்கைத் தமிழன் சபேசன்

  • November 2, 2025
  • 0 Comments

ஜீ தமிழ் சரிகமப வில் இன்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அடுத்த பைனலிஸ்ட் அறிவிக்கப்பட்டார். அவர் வேறு யாரும் இல்லை, நம் இலங்கைத் தமிழன் சபேசன் தான். சபேசன் மற்றும் பவித்தாவுக்கு இடையில் போட்டிகள் கடுமையாக இருந்தது. இதில் சபேசன் மூன்றாவது பைனலிஸ்ட்டாக அறிவிக்கப்பட்டுள்ளார். சபேசன் இராவணன் படத்திலிருந்து கார்த்திக் பாடிய உசுரே போகுதே.. உசுரே போகுதே.. என்ற பாடலை பாடினார். ஒரிஜினல் பாடகருக்கு முன்பே சற்றும் பயமில்லாமல் சபேசன் பாடிய பாடலைக்கேட்டு அரங்கமே எழுந்து நின்றது. […]

ஐரோப்பா

மலையேற்றத்தில் ஈடுபட்ட 05 ஜெர்மன் பிரஜைகள் உயிரிழப்பு!

  • November 2, 2025
  • 0 Comments

இத்தாலியில் ஆல்ப்ஸ் மலையேற்றத்தில் ஈடுபட்ட ஐவர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஐந்து பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இரண்டு ஆண்கள், ஒரு பெண்ணின்  உடல்  நேற்று மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காணமல்போயிருந்த மேலும் இரண்டு பேரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிய இரண்டுபேர் ஆபத்தான காயங்களுடன் உயிர் பிழைத்துள்ள நிலையில் அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலிய ஆல்ப்ஸ் மலைகளில் […]

உலகம் செய்தி

அணுசக்தி நிலையங்களை அதிக பலத்துடன் மீண்டும் கட்டுவோம் – ஈரான்!

  • November 2, 2025
  • 0 Comments

தெஹ்ரான் தனது அணுசக்தி நிலையங்களை “அதிக பலத்துடன்” மீண்டும் கட்டியெழுப்பும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian) இன்று  தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் அமெரிக்கா குண்டுவீசித் தகர்த்த அணுசக்தி நிலையங்களை மீண்டும் தொடங்க தெஹ்ரான் முயற்சித்தால், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது புதிய தாக்குதல்களுக்கு உத்தரவிடுவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இந்நிலையில் மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian) இன்று அணுசக்தி தளங்களை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் மேற்படி […]

இலங்கை

பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் நாடாளுமன்ற ஊழியர்கள்!

  • November 2, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை  சமர்பிக்கும் காலத்தில் நாடாளுமன்ற ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிர்வாகத்தை மறுசீரமைப்பது தொடர்பான குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. மறுசீரமைப்பு குறித்த குழு அறிக்கை ஏற்கனவே நாடாளுமன்றத் துறைத் தலைவர்களுக்கு மேலும் கவனிப்புக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேற்படி அறிக்கைக்கு ஊழியர்கள் கடும் […]

ஐரோப்பா செய்தி

ஏதென்ஸில் (Athens) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் டாக்ஸி ஓட்டுநர்கள்!

  • November 2, 2025
  • 0 Comments

ஏதென்ஸில் (Athens) உள்ள டாக்ஸி ஓட்டுநர்கள் (Taxi Drivers)  48 மணிநேர பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ekathimerini இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பேருந்துப் பாதைகளில் இலவச அணுகலை வழங்கவும், ஏதென்ஸ் (Athens)  மற்றும் தெசலோனிகியில் (Thessaloniki) புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட அனைத்து டாக்சிகளும் ஜனவரி 1, 2026 முதல் 2035 இற்கு இடையில்  முழுமையாக மின்சாரத்தில் இயங்க வேண்டும் என்ற காலக்கெடுவை அரசாங்கம் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் […]

பொழுதுபோக்கு

பைசன் இதுவரை செய்துள்ள வசூல் விபரம் வெளியானது

  • November 2, 2025
  • 0 Comments

இயக்குநர் மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த படம் பைசன் காளமாடன். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர் ஆகியோர் நடித்திருந்தனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருந்தார். தீபாவளி ரோசில் குதித்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில், இதுவரை பைசன் படம் உலகளவில் ரூ. 65 கோடி வசூல் செய்துள்ளது. தொடர்ந்து கிடைத்து வரும் ஆதரவுகளால் இனி வரும் நாட்களிலும் […]

error: Content is protected !!