கனடாவின் வரலாற்று சிறப்புமிக்க நகரம் ஆபத்தில் – அதிகாரிகள் எச்சரிக்கை
கனடாவின் வரலாற்று சிறப்புமிக்க ஜாஸ்பர் நகரம் கடும் சேதத்தை சந்திக்க நேரிடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேற்கு கனடாவில் உள்ள ஜாஸ்பர் தேசிய பூங்காவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
கனடியன் ராக்கிஸ் ரிசார்ட் நகரத்தில் உள்ள 33 சதவீத கட்டிடங்கள் காட்டுத்தீயால் அழிந்துவிட்டன, அவை அதிக காற்று காரணமாக வேகமாக பரவி வருகின்றன.
மேலும் 89,000 ஏக்கர் எரிந்துள்ளது.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், சுமார் 5,000 உள்ளூர்வாசிகள் மற்றும் 20,000 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 8 times, 1 visits today)