“மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றம்”
மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டதாக சவுதி அரேபியாவிடம் ஈரான் வெளிவிவகார அமைச்சர் Seyed Abbas Araghchi வலியுறுத்தியுள்ளார்.
சவுதி அரேபியாவை ஒரு சகோதர நாடாக மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஈரானின் ராணுவ நடவடிக்கைகள் அரபு மக்களுக்கு மதிப்பளிக்காத வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களை மட்டுமே குறிவைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க விமானப்படையின் சேதமடைந்த விமானம் போன்ற ஒரு புகைப்படத்தைப் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அவர், அமெரிக்காவின் வான்வழி கட்டளை மையத்தை ஈரான் அழித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளிக்கவில்லை.





