வரலாற்றில் முதல் முறையாக 4,900 டொலரை எட்டிய தங்கத்தின் விலை!!
வரலாற்றில் முதல் முறையாக சர்வசேத சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்று $4,900 டொலரை தாண்டியுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பின்படி, ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $4,917.65 டொலர் என்ற சாதனை உச்சத்தை எட்டியது.
புவிசார் அரசியல் பதட்டங்கள், அமெரிக்க டொலரின் சரிவு, மற்றும் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு தொடர்பான எதிர்பார்ப்புகள் காரணமாக தங்கத்தின் விலை சாதனை அளவு உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோல் வெள்ளி மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றின் விலைகளும் உச்சம் தொட்டுள்ளன.
இதேவேளை வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது 5000 அவுன்ஸிற்கு அருகில் இருக்கும் விலையானது 5,187.79 டொலராக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.





