இலங்கையில் மார்ச்சில் எரிபொருள் விலை திருத்தம்?
மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இந்த மாதம் மேற்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை விடுத்தார்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டு, விலை திருத்தம் தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் எதிர்காலத்தில் எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே எரிபொருள் ஒதுக்கீடு முறைமை இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.





