பிரான்ஸ் பூங்காவில் நடந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுவர்களை சந்தித்த பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்சில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் தாக்குதல் நடத்தினார்.
இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 22 மாத குழந்தை, 5 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்கள், 2 பெரியவர்கள் அடங்குவார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து மர்மநபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை பிரானஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிஜிட் உடல் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினர்.
(Visited 18 times, 1 visits today)