இலங்கை செய்தி

39 நாடுகளுக்கு 06 மாத காலத்திற்கு இலவச சுற்றுலா விசா

தெரிவு செய்யப்பட்ட 39 நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு கட்டணமின்றி இலவசமாக சுற்றுலா விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 06 மாத காலத்திற்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் விதிகளுக்கமைய, இலவச சுற்றுலா விசாக்களை வழங்குவதற்காக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட வரைவை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான அனுமதி கோரி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சலுகை அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா,பஹ்ரைன்,பெலாரஸ்,பெல்ஜியம்,கனடா,சீனாசெக் குடியரசு,டென்மார்க்,பின்லாந்து,பிரான்ஸ்,ஜேர்மனி,இந்தியா,இந்தோனேசியா,ஈரான்,இஸ்ரேல்,இத்தாலி,ஜப்பான்,கசக்ஸ்தான் குவைத், மலேசியா,நேபாளம்,நெதர்லாந்து,நியூசிலாந்து,நோர்வே,ஓமான்,பாகிஸ்தான்,போலந்து,கத்தார்,ரஷ்யா,சவூதி,அரேபியா,தென் கொரியா ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!