நாங்கள் மறக்கமாட்டோம் – பிரான்ஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரான்ஸை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இஸ்ரேலுக்குச் செல்லும் இராணுவப் பொருட்கள் ஏற்றப்பட்ட விமானங்கள் பிரெஞ்சு வான்வழியை பயன்படுத்த பிரான்ஸ்
அனுமதிக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
‘ட்ரூத்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஈரானுடனான போரிலும் பிரான்ஸ் உதவிகரமாக இல்லை” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இதனை நினைவில் வைத்துக் கொள்ளும் என அவர் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.





