தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற கோர விபத்து – நாற்பதிற்கும் மேற்பட்டோர் பலி!

தென்னாப்பிரிக்காவின் மலைப்பகுதியில் பேருந்து ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் பிரிட்டோரியாவிலிருந்து (Pretoria)வடக்கே சுமார் 400 கிலோமீட்டர் (248 மைல்) தொலைவில் உள்ள லூயிஸ் டிரிச்சார்ட் (Louis Trichardt) நகருக்கு அருகில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து வருவதாகவும் சாலைப் போக்குவரத்து மேலாண்மைக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் சைமன் ஸ்வானே தெரிவித்துள்ளார்.
குறித்த பேருந்தில் ஜிம்பாப்வே (Zimbabwe) மற்றும் மலாவி (Malawi) நாட்டினர் பயணம் செய்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணத்தை அறிய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
(Visited 9 times, 1 visits today)