உலகம்

நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்பு

நேபாளத்தின் புகழ்பெற்ற ராப் இசைக்கலைஞரும், முன்னாள் மேயருமான 35 வயதுடைய பாலேந்திர ஷா (Balen Shah), நேபாளத்தின் மிக இளவயது பிரதமராக இன்று பதவியேற்றார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், சமூக ஊடகத் தடை மற்றும் ஊழலுக்கு எதிராக நேபாள இளைஞர்கள் (Gen-Z) முன்னெடுத்த மாபெரும் போராட்டத்தினால் அப்போதிருந்த அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நாட்டின் முதல் பொதுத்தேர்தலில், பாலேந்திர ஷா தலைமையிலான கட்சி 275 இடங்களில் 182 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேபாளத்தின் ஜனாதிபதி ராம் சந்திர பௌடெல் முன்னிலையில், இன்று மதியம்  காத்மண்டுவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில்பாலேந்திர ஷா பிரதமராகப் பதவியேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Mahi

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!