ஐரோப்பா

இஸ்தான்புல்லில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் ஏற்பட்ட அவசர நிலை!

இஸ்தான்புல்லில் இருந்து லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த ஏர்பஸ் A320 விமானத்தில் நான்கு பயணிகள் சுகவீனம் அடைந்த  நிலையில்  அவ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

142 பயணிகளுடன் புறப்பட்ட குறித்த விமானமானது நேற்று மாலை புக்கரெஸ்ட் ஹென்றி கோண்டா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

விமானம் தரையிறங்கியதும் அங்கு தயாராக இருந்த வைத்திய குழுவினர் விரைந்து செயற்பட்டு குறித்த நால்வருக்கும் சிகிச்சையளித்துள்ளனர்.

விமானத்தில் ஏற்பட்ட புகையினை சுவாசித்ததன் காரணமாக அவர்கள் சுகவீனம் அடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நால்வரும் நலமாக இருப்பதாகவும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் புக்கரெஸ்ட் விமான நிலையத்தில் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளனர். மேலும் விமானம் முழுமையாக ஆய்வு உட்படுத்தப்பட்டதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்