தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் பாழிர் மலைத் தொடரில், ஜீரீம் சாஷமா வெந்நீர் ஊற்றுக்கு அருகே நேற்று இரவு 11.01 நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தஜிகிஸ்தான் இடையே உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே 80 கி.மீ. ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் இன்று தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
எந்த இடத்திலும் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளத்தாக்கு நிலநடுக்க ரீதியாக நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதியில் அமைந்திருப்பதால், கடந்த காலங்களில் காஷ்மீரில் நிலநடுக்கங்கள் பேரழிவை ஏற்படுத்தின.
(Visited 2 times, 2 visits today)