இந்த ஆண்டின் முதல் Wolf Moon!! எப்பொழுது தோன்றும் தெரியுமா?
இந்த ஆண்டின் முதல் வுல்ஃப் மூன் (Wolf Moon) வரும் நான்காம் திகதி தோன்றவுள்ளது.
சந்திரனும் பூமியும் வழக்கத்தை விட நெருக்கமாக இருக்கும்போது வுல்ஃப் மூன் (Wolf Moon) ஏற்படுகின்றன, இதனால் சந்திரன் 14 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் பிரகாசமாகவும் தோன்றும்.
இந்த வுல்ஃப் மூன் (Wolf Moon) ஆன்மீக ரீதியாகவும் மிகவும் பிரபல்யமானது. இதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதையும் உள்ளது.
பண்டைய காலங்களில், கடுமையான குளிர் நாட்களில் , வடக்கு அரைக்கோளத்தில் ஓநாய்களின் அலறல்கள் அதிகமாகக் கேட்கப்பட்டன. அதனால்தான் இந்த முழு நிலவுக்கு ஓநாய் நிலவு என்று பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது.





