அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசாமிக்கு கொலை மிரட்டல்?
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் விவேக் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நியூ ஹாம்ப்ஷயர் பகுதியில் பிரச்சார நிகழ்வுக்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொலை அச்சுறுத்தல் எந்த வேட்பாளருக்கு விடுக்கப்பட்டது என்ற தகவலை அமெரிக்க வழக்குறைஞர் அலுவலகம் வெளியிடவில்லை. இருப்பினும், குறித்த அச்சுறுத்தல் விவேக் ராமசாமிக்கு விடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்தை கையாள்வதில் சட்ட அமலாக்கத்தின் விரைவான தன்மை மற்றும் தொழில்முறைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்றும் அனைத்து அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்கிறோம்” என்றும் துணை தகவல் தொடர்பு இயக்குனர் ஸ்டீபன் மைசாஜ்லிவ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் டோவரைச் சேர்ந்த டைலர் ஆண்டர்சன் என்ற 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.