பாதுகாப்பு தகவல்களை வழங்கினால் மரண தண்டனை: ஈரான் எச்சரிக்கை!
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான புகைப்படங்கள் அல்லது காணொளிகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்குப் பகிரும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் ஈரான் அரசு என்று எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் இயற்றப்பட்ட புதிய உளவுச் சட்டத்தின் கீழ், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்களுக்குத் தூக்குத் தண்டனையும் வழங்கப்படும் என்று நீதித்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இடங்களின் படங்களை அனுப்புவது எதிரி நாடுகளுக்கு உளவுத் தகவல்களை வழங்கி உதவுவதற்குச் சமமாகக் கருதப்படுகிறது.
இந்த கடுமையான சட்டத்தின் பின்னணியில், ஏற்கனவே உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அரசாங்கங்களுக்குத் தகவல் அளிப்பதை நாட்டிற்கு எதிரான துரோகமாக ஈரான் கருதிவருகின்றது.





