CT Match 09 – பாகிஸ்தான் மற்றும் வங்கதேச போட்டி மழையால் ரத்து

சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன.
இதில் ராவல்பிண்டியில் 9வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் – வங்காளதேசம் ஆகிய அணிகள் இன்று மோத இருந்தனர்.
ஆனால் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இரு அணிகளும் தங்களது முதல் 2 ஆட்டங்களில் தோல்வியடைந்து விட்டதால் ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 2 visits today)