இலங்கையில் பாடசாலை மாணவி மீது கூட்டு பாலியல் துஸ்பிரயோகம்: காதலன் உட்பட 8 பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஹங்வெல்ல பிரதேசத்தில் 16 வயது மாணவியை கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் எனத் தெரிவிக்கப்படும் ஒருவர் உட்பட 8 இளைஞர்களை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்துமாறு பதில் நீதவான் பிரியங்கா மத்தும படபாண்டி இன்று உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக கால அவகாசம் கோரியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரணால, ஜல்தாரா பிரதேசத்தில் வசிப்பவர்கள் அடங்கிய குழு, இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட 16 வயது மாணவி அளித்த புகாரில் விரைவான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 11 times, 1 visits today)