பிக் பாஸ் வீட்டில் ஆட்டத்தை ஆரம்பித்தார் வாட்டர்மெலன் திவாகர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில், வாட்டர்மெலன் திவாகர் உள்ளே சென்ற முதல் நாளே தன்னுடைய சேட்டைகளை ஆரம்பித்திருக்கிறார்.
தன்னைத் தானே நடிப்பு அரக்கன் என சொல்லிக் கொள்ளும் திவாகர், பிக் பாஸ் வீட்டிலும் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்துகிறேன் என கூறி, கர்ணன் படத்தில் வரும் சிவாஜி கணேசனை போல் நெஞ்சை பிடித்துக் கொண்டு நடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்த பார்வதியின் பாவடையில் திவாகர் மிதித்துவிட, அவர் பாவாடைய விடுங்க என சற்று டென்ஷன் ஆகிவிட்டார்.
அதேபோல் இன்ஸ்டா பிரபலமான அரோரா தான் இரண்டாவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார்.
அவரைப் பார்த்ததும், உங்க கண்ணு ரொம்ப அழகா இருக்கு என வழிந்து பேசத் தொடங்கிவிட்டார் திவாகர்.
அப்போது அங்கிருந்த மற்றொரு போட்டியாளரான எஃப்.ஜே, அந்த பொண்ணுக்கு உன்னோட பேத்தி வயசு ஆகுதுயா என சொல்லி செம பல்பு கொடுத்தார். இந்த வீடியோ கிளிப்பை இணையத்தில் வைரலாக்கி வரும் நெட்டிசன்கள், அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் என கூறி திவாகரை கலாய்த்து வருகிறார்கள்.
இப்படி பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற முதல் நாளே தன்னுடைய கிறுக்குத்தனமான செயல்களை செய்யத் தொடங்கி உள்ளதால், இன்னும் என்னென்னலாம் பண்ண போறாரோ என பதறிப் போய் உள்ளனர் ரசிகர்கள்.






