ட்ரம்பின் வரி விதிப்பு எச்சரிக்கைக்கு இணங்க மறுக்கும் சீனா!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனா மீது 100 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ட்ரம்பின் இந்த எச்சரிக்கைக்கு சீனா அடிப்பணிய மறுப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதற்கு பதிலாக பேச்சுவார்த்தைகள் மூலம் ட்ரம்ப் தீர்வு காண வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
சீனாவின் நிலைப்பாடு நிலையானது” என்று வர்த்தக அமைச்சகம் அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளது.
அரிய மண் ஏற்றுமதி மீது சீனா கட்டுப்பாடுகளை விதிப்பதாக அறிவித்த பிறகு ட்ரம்ப் வரி விதிப்பு எச்சரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)