இந்தியா தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின், விஜய் வேட்பு மனு தாக்கல்!

தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தீவிர பரப்புரை முன்னெடுக்கப்பட்டுவருவதால் அரசியல் களம் அனல் கக்குகின்றது.

பிரதான கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் இன்று (30) ஆரம்பமாகியுள்ளது.

இதற்கமைய கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் M.K. Stalin வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 4-வது முறையாக ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

பெரம்பூர் தொகுதியில் தவெக TVK தலைவர் விஜய்யும் Vijay இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இந்தத் தொகுதியில் தவெக சார்பில் விஜய், திமுக DMK சார்பில் ஆர்.டி.சேகர், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவின் சார்பில் ம.திலகபாமா, நாதகவின் வெற்றித்தமிழன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தவிர்த்து, திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்
error: Content is protected !!