பொழுதுபோக்கு

அதிரடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற விஜய் சேதுபதி.. புதிய புரோமோ

வெற்றிகரமாக 91 நாட்களை எட்டியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் பைனலை நோக்கி நகர்ந்து வருகிறது. கடந்த மூன்று வாரங்களாக பிக்பாஸ் வீட்டின் உள்ளே உள்ள போட்டியாளர்களை குறைப்பதில் தீவிரம் காட்டி வரும் பிக்பாஸ், தொடர்ந்து டபுள் எவிக்ஷன் செய்து வருகிறார்.

அந்த வகையில் இந்த வாரமும் 2 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வங்கியில் நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டில், ஃபைனலிசில் ஒருவராக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட, மஞ்சரி மற்றும் ராணவ் ஆகிய இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தற்போது டாப் 8 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில், இவர்களில் டாப் 5 கண்டெஸ்டெண்ட்டாக பைனலுக்குள் நுழைய உள்ளது யார் யார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் போட்டிகளாளர்களை நேரடியாக பைனலுக்குள் அழைத்துச் செல்லும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் அதிக புள்ளிகளை பெறும் போட்டியாளரே நேரடியாக பைனலுக்குள் நுழைவார் என பிக்பாஸ் அறிவித்தார். இதில் இடம்பெற்ற அனைத்து டாஸ்க்களிலும், பிரபல சீரியல் நடிகர் ரயான் திறமையாக விளையாடி, முன்னணி இடத்தை பிடித்தார்.

டிக்கெட் டூ பினாலே வென்ற ராயனுக்கு அதுக்கான அங்கீகாரத்தை கொடுக்க, விஜய் சேதுபதியை இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். இதுகுறித்த புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் பிக்பாஸ் வீடே மிகவும் செல்லபிரேஷன் மோடில் காணப்படுகிறது. வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்து முதல் ஃபைனலிஸ்ட்டாக ரயான் உள்ளே சென்றது யாரும் எதிர்பாராத ஒன்று தான் என்றாலும், இவர் டைட்டில் வெல்வதற்கான வாய்ப்பு குறைவு என்பதே ரசிகர்கள் கருத்து.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!