‘ஜெயிலர்’ படத்திற்காக நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மூன்றாம் நாள் ஓட்டத்தில் உலகளவில் புதிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
அனிருத் இசையமைத்த இப்படம் ரஜினி ரசிகர்களையும், பொது ரசிகர்களையும் திருப்திப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுவது என்னவென்றால், படக்குழுவினரின் சம்பள விபரம் தான்..
அந்த வகையில், ரஜினிகாந்த் சம்பளமாக 110 கோடி ரூபாயும், ‘காவாலா’ பாடல் உட்பட சில நிமிடங்கள் காட்சிக்கு தமன்னா மூன்று கோடி ரூபாயும் பெற்றுள்ளனர்.
அதே அறிக்கை அவர்களின் இரண்டு காட்சிகளுக்காக மோகன் லால் 8 கோடியும், சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் தலா 4 கோடியும் பெற்றுள்ளனர்.
உறுதிப்படுத்தப்படாத அறிக்கையின்படி மற்ற நடிகர்களின் சம்பளமாக யோகி பாபு – 1 கோடி, ரம்யா கிருஷ்ணன் – 80 லட்சம், சுனில் – 60 லட்சம், வசந்த் ரவி – 30 லட்சம், ரெடின் கிங்ஸ்லி – 25 லட்சம் மற்றும் விநாயகன் – 35 லட்சமும் சம்பளமாக பெற்றுள்ளனர்.