லிபியா மக்களுக்கு காத்திருக்கும் மற்றுமோர் ஆபத்து!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா டெர்னா நகரவாசிகள் கண்ணிவெடி அபாயத்தில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், சுத்தமான தண்ணீரை தேடி தொலைதூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக கண்ணி வெடி அபாயத்தை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை லிபியாவில் டெர்னா அணை உடைந்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11300 ஐக் கடந்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)