பொழுதுபோக்கு

GOAT படத்தில் இணைந்த சன்டிவி பிரபலம்.. அப்படி இருக்குமோ?

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் Greatest Of All Time திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடிப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

இப்படத்தின் மூன்று போஸ்டர்கள் இதுவரை வெளிவந்துள்ள நிலையில், அடுத்ததாக Greatest Of All Time படத்தின் முதல் பாடல் வெளிவரவிருக்கிறது என தகவல் தெரிவிக்கின்றனர். இது விஜய் பாடிய பாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில், தற்போது சன்டிவி பிரபலம் ஒருவரும் இணைந்துள்ளார்.

அந்த வகையில், சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக டாப் 5 ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை கனிகா.

இவர் வெள்ளித்திரையில் அஜித், மாதவன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில், விஜய்யின் Greatest Of All Time படத்திலும் நடிகை கனிகா நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெங்கட் பிரபுவுடன் நடிகை கனிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விஜய்யின் Greatest Of All Time படத்திலும் நடிகை கனிகா நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெங்கட் பிரபுவுடன் நடிகை கனிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

எனினும் Greatest Of All Time படத்திற்காக வெங்கட்பிரபு இலங்கை சென்றிருந்தார். இதேவேளை விடுமுறைக்காக கனிகாவும் அண்மையில் இலங்கை சென்றிருந்தார்.

இந்த நிலையில், குறித்த படம் இலங்கையில் எடுத்திருந்திருக்கலாம் என்ற தகவலும் வெளியியாகி உள்ளது.

 

(Visited 7 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content