நெத்திலி விலை இருமடங்கு உயர்வு
ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரமான நெத்திலி கருவாட்டின் விலை உயர்ந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் கணேஷ் விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
போருக்கு முன்னர் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ நெத்திலி, தற்போது 1500 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உற்பத்திச் செலவு மற்றும் விநியோகச் சிக்கல்களே இந்த விலை உயர்விற்குக் காரணம் என கணேஷ் விநாயகசுந்தரம் சுட்டிக்காட்டினார்.





