பொழுதுபோக்கு

வெவ்வேறு பாதையில் செல்லும் தல – தளபதி… தமிழ் சினிமாவின் நிலை என்ன?

துணிவு படத்தின் வெற்றிக்குப் பின் அஜித்குமார், மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அஜர்பைஜான், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் இப்பட ஷூட்டிங் நடைபெற்று முடிந்த நிலையில் இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. இப்படம் பொங்கல் பண்டிகையொட்டி வெளியாகலாம் என தகவல் வெளியாகிறது.

இப்பட வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே மார்க் ஆண்டனி என்ற ஹிட் படம் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனக்கு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அஜித்குமார் பைக்கில் உலக சுற்றுப் பயணம், இந்தியாவில் பயணம் செய்வதுடன், கார் ரேஸிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில், துபாயில் உள்ள கார் ரேஸ் தளத்தில் BMW மற்றும் ரேஸ் காரில் சீறிப்பாய்ந்தார். இதுகுறித்த வீடியோக்களும் வைரலாகின.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு துபாயில் ரூ. 9 கோடி மதிப்பிலான சிவப்பு நிறத்தில் உலகின் விலையுயர்ந்த கார் பிராண்டான ஃபெராரி கார் ஒன்றை வாங்கினார்.

இதையடுத்து, அண்மையில் மற்றொரு பிரபல கார் பிராண்டான போர்ச் GT3 R 5 ரக வெள்ளை நிறத்திலான காரை அஜித்குமார் வாங்கியதாக அவரது மனைவி ஷாலினி தன் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டிருந்தார். இந்தக் கார் ரூ. 4 கோடி விலை மதிப்புடையதாகும்.

இந்த நிலையில், அஜித்குமார் மீண்டும் கார் ரேஸில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகிறது. அதன்படி, European GT4 Championhip -2025 மோட்டார் கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்க அஜித் திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாட்டு அணிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக Federation of Motor Sports Slubs of India தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் சரிசமமாக போட்டி போட்டு ஓடும் நிலையில், விஜய் நடிப்பிலிருந்து விலகி அரசியலுக்கு போகின்றார்.

அவருடைய இடத்தை பிடிப்பதற்கு பலரும் போட்டி போடும் நிலையில், அஜித் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவரது பாணியில் கார் ரேஸ் செல்கின்றமை அஜித் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

(Visited 2 times, 2 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content