பொழுதுபோக்கு

அடுத்தடுத்து விலகும் பிரபலங்கள்… குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உலக அளவில் ரசிகர்கள் பெருகி இருக்கிறார்கள்

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்த புகழ் சினிமாவில் கதாநாயகனாகும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.

பாலா, புகழ், மணிமேகலை, சிவாங்கி என விஜய் டிவியின் பிராண்டுகள் மொத்தமும் சேர்ந்து குக் வித் கோமாளிக்கு மிகப்பெரிய தூண்களாக இருந்தார்கள்.

ஒரு சமையல் நிகழ்ச்சியில் இப்படி வயிறு குலுங்க சிரிக்க வைக்க முடியும் என்பதை செய்து காட்டியது இந்த நிகழ்ச்சி.

இதுவரை நான்கு சீசன்கள் முடிந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது. அதில் போட்டியாளர்களாக யார் யார் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து நடுவராக பங்கேற்று வந்த வெங்கடேஷ் பட் ஐந்தாவது சீசனில் தான் பங்கேற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இன்னொரு நடுவரான செஃப் தாமுவும் இந்த சீசனில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு பேரும் அடுத்தடுத்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு அது ஏமாற்றமாக அமைந்துள்ளது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!