திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரோஜா

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்கிய ரோஜா ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் கீழ் செயல்பட்டு வருகிறார்.
இவர் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.
சென்னையில் உள்ள வீட்டில் நேற்று இரவு தங்கியிருந்த அமைச்சர் ரோஜாவுக்கு திடீரென கால் வீக்கம் ஏற்பட்ட நிலையில், வலியால் அவர் அவதிப்பட்டுள்ளார்.
இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ வைத்தியசாலையில் ரோஜா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் விரைவில் குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 11 times, 1 visits today)