அரசியல் இலங்கை செய்தி

“நாடாளுமன்றத்தை கொளுத்தவந்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை அவசியம்”

அரகலயவின்போது நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்கு வந்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJP நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் S.M. Marikar வலியுறுத்தினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,

“நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவை கொலை செய்த நபர்களுக்கு தண்டனை கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. ஏனெனில் காட்டாட்சிக்கு இடமளிக்க கூடாது. நாட்டில் சட்டம் அமுலாக வேண்டும்.

நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்கும் நபர்கள் வந்தனர். சிலர் தற்போது அமைச்சர்களாக உள்ளனர். அவர்களுக்கு எதிராகவும் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆட்சியின்கீழ் அது நடக்குமா என்பது சந்தேகமே;.” – என்றார் எஸ்.எம். மரிக்கார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!